நவும் இதெல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவும் இதெல்சன்

நவும் இலியிச் இதெல்சன் (Naum Ilyich Idelson, உருசியம்: Наум Ильич Идельсон, மார்ச்சு 1 (13), 1885, புனித பீட்டர்சுபர்கு - சூலை 14, 1951, இலெனின்கிராது ஓர் உருசிய, சோவியத் கோட்பாட்டு வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியல் வரலாற்றிலும் கணிதவியல் வரலாற்றிலும் புலமை வாய்ந்தவர்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் 1885மாச்சு 1 (13) இல் புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். இவர் 1909 ஆம் ஆண்டில் பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதவியல் துறையில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.இவர் 1919 முதல் 1931 வரை பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் பணியாற்றினார். 1931 முதல் 1936 வரை புல்கொவோ வான்காணகத்தின் வானியல் கோட்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்தார்.இவர் 1946 ஆம் ஆண்டில் புல்கொவோ வானகாணக இயக்குநரானார். இவர் 1951 ஜூலை 14 இல் இலெனின்கிராதில் இறந்தார்.

நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று இதெல்சன் குழிப்பள்ளம் என இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kronk, Gary W. (2006). "Who's Who in Comet History: I".
  2. "USGS Astro: Planetary Nomenclature - Moon Nomenclature Crater". www.iap.fr. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவும்_இதெல்சன்&oldid=3897361" இலிருந்து மீள்விக்கப்பட்டது