தமிழ்வழிக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்வழிக் கல்வி என்பது தமிழ் கல்விமொழியாக முதன்மையாக அமையும் கல்வி முறைமை ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ்வழிக் கல்வி உள்ளது.

இந்தியா[தொகு]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதன்மையாக தமிழ்வழிக் கல்வி உள்ளது. தனியார் பள்ளிகளில் முதன்மையாக ஆங்கில வழிக் கல்வி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் 2005-2006 கணக்கின்படி EGS பள்ளிகள் மற்றும் வகைப்படுத்தப்படாத பள்ளிகள் தவிர்த்து 51529 அடிப்படைக் கல்விப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன.[1] இதில் 16,997 பள்ளிகள் உதவி வழங்கப்படும் அல்லது முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்தக் கணக்கீட்டின் படி சுமார் 67% மாணவர்கள் தமிழ் வழியில் தமது அடிப்படை கல்வியின் ஒரு பகுதியையாவது பெறுவர் என்று ஊகிக்கலாம். உயர் வகுப்புக்களில் இந்த விழுக்காடு கணிசமாக மாறுகின்றது. மொத்த 4632 மேல்நிலைப் பள்ளிகளில், 40% மட்டுமே முழுமையான அரசு பள்ளிகள். 1099 அல்லது 24% பள்ளிகள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், 1677 அல்லது 36% பள்ளிகள் முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இதே கணிப்பீட்டின் படி 10,080,179 பள்ளி வயது மாணவர்கள் உள்ளார்கள்.[2] எனவே சுமார் 6.7 மில்லியன் மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வியின் ஒரு பகுதியை தமிழ் வழியில் பெறுகிறார்கள் என்று கூறலாம்.

கேரளா[தொகு]

கேரளத்தில் 26883 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகிறார்கள்.[3]

கேரளாவில் அரசு, அரசு உதவி பெறு, அரசு உதவி பெறாத 74 தனித் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 128 இணைத் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன.[4]

இலங்கை[தொகு]

இலங்கையில் கல்வி மொழி அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை, மாவட்டங்கள் வாரியாக - 2016
இலங்கையில் கல்வி மொழி அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை, மாவட்டங்கள் வாரியாக - 2016

2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் மொத்தம் 4,143,330 பள்ளி போகும் அனைத்து மொழி மாணவர்கள் உள்ளார்கள். இதில் 1,028,032 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகின்றார்கள். இலங்கையில் மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (95%) தாய்மொழிக் கல்வியையை அரசு பள்ளியின் ஊடாகப் பெறுகின்றார்கள்.[5]

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ்ப் பள்ளிதானும் உள்ளது. இலங்கையில் 2989 தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 66 சிங்களமும் தமிழும், 168 தமிழும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகள் உள்ளன.[6]

மலேசியா[தொகு]

மலேசியாவில் தமிழ் வழி அடிப்படை கல்வி உள்ளது. மலேசிய பொதுக் கொள்கை ஆய்வுக்கான நடுவத்தின் (Centre for Public Policy Studies) அறிக்கை ஒன்றிபடி மலேசியாவில் 2012 இல் மலேசியாவில் 523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 55% இந்திய மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பள்ளிக்குச் செல்கிறார்கள்.[7] 2007 இல் 105,618 மாணவர்கள் தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றார்கள்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாட்டில் கல்வி புள்ளிவிபரம்" (PDF). அனைவருக்கும் கல்வி இயக்கம். Archived from the original (PDF) on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழ்நாட்டில் கல்வி புள்ளிவிபரம்" (PDF). அனைவருக்கும் கல்வி இயக்கம். Archived from the original (PDF) on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Selected Educational Statistics - 2010-2011" (PDF). கேரள அரசு - புள்ளிவிபரங்கள் பிரிவு. Archived from the original (PDF) on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Selected Educational Statistics - 2010-2011" (PDF). கேரள அரசு - புள்ளிவிபரங்கள் பிரிவு. Archived from the original (PDF) on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "School Census Preliminary Reports 2016" (PDF). கல்வி அமைச்சு, இலங்கை. 8 டிசம்பர் 2016. Archived from the original (PDF) on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "School Census Preliminary Reports 2016" (PDF). கல்வி அமைச்சு, இலங்கை. 8 டிசம்பர் 2016. Archived from the original (PDF) on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "VERNACULAR SCHOOL S IN MALAYSIA: "A heritage to be celebrated or a hindrance to nation building?"" (PDF). Centre for Public Policy Studies. 23 ஏப்பிரல் 2012. Archived from the original (PDF) on 2015-10-20. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 28 செப்ரம்பர் 2007. "Tamil Schools". Tamil Nesan. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்வழிக்_கல்வி&oldid=3930694" இலிருந்து மீள்விக்கப்பட்டது