பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும்.[2] இந்த ஆலை 1969 இல் நிறுவப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் கரும்பு அரவைப் பணி நடக்கும். இதில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இந்தக் கரும்பாலைக்குப் பாலக்கோட்டை சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர் போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைந்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் கொடுத்து வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது.

இந்த ஆலையில் கரும்பு அரவையின்போது வெளியேறும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாததால் சர்க்கரை ஆலையைச் சுற்றியுள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் குடிக்கவும், விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாத நிலையை அடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தருமபுரி அருகே சர்க்கரை ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு". செய்தி. தினகரன். 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 12 சர்க்கரை ஆலைகளில் மின் நிலையம், இயந்திரங்கள் நவீனமயமாக்கல்: ரூ.1,241 கோடியில் திட்டப்பணிகள்

வெளி இணைப்புகள்[தொகு]