பென்சீன்டிரையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்சீன்டிரையால்கள் (Benzenetriols ) என்பவை C6H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவைதராக்சிபென்சீன்கள் அல்லது டிரை ஐதராக்சி பென்சீன்கள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. அரோமாட்டிக் சேர்மமான இவை பாலிபீனால்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு பென்சீன் வளையத்தில் மூன்று ஐதராக்சில் குழுக்கள் இணைக்கப்பட்டிருப்பதால் இவை பாலிபீனால்கள் என அழைக்கப்படுகின்றன.

ஐதராக்சிகுயினால் புளோரோகுளூசினால் பைரோகலால்
பென்சீன்-1,2,4-டிரையால் பென்சீன்-1,3,5-டிரையால் பென்சீன்-1,2,3-டிரையால்

இம்மூன்று சேர்மஙகளும் C6H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடிலேயே அழைக்கப்படுகின்றன. (மோலார் நிறை : 126.11 கி/மோல், மூலக்கூற்று எடை : 126.031694).

1,2,3,5-டெட்ரா ஐதராக்சிபென்சீன் மற்றும் 1,2,3 ட்ரை ஐதராக்சிபென்சீன் இரண்டையும் பைரோகலால் ஐதராக்சிடிரான்சுபெரேசு என்ற நொதி பயன்படுத்திக் கொள்கிறது. 1,3,5-டிரை ஐதராக்சிபென்சீனும் 1,2,3,5-டெட்ரா ஐதராக்சி பென்சீனும் விளைபொருட்களாக உருவாகின்றன. பெலோபாக்டெர் அசிடிகால்லிசியில் இந்நொதி காணப்படுகிறது[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "P 80564 Pyrogallol hydroxytransferase small subunit". UniProtKB. Uniprot.
  2. Schink, B.; Pfennig, M. (December 1982). "Fermentation of trihydroxybenzenes by Pelobacter acidigallici gen. nov. sp. nov., a new strictly anaerobic, non-sporeforming bacterium". Archives of Microbiology 133 (3): 195–201. doi:10.1007/BF00415000. https://archive.org/details/sim_archives-of-microbiology_1982-12_133_3/page/195. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சீன்டிரையால்&oldid=3520814" இலிருந்து மீள்விக்கப்பட்டது