குஜராத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 32°35′N 73°45′E / 32.583°N 73.750°E / 32.583; 73.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குஜராத் மாவட்டம்
மாவட்டம்
வடக்கு பஞ்சாப் மாகாணத்தில் குஜராத் மாவட்டத்தின் அமைவிடம்
வடக்கு பஞ்சாப் மாகாணத்தில் குஜராத் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப் மாகாணம்
தலைமையிடம்குஜராத்
பரப்பளவு
 • மொத்தம்3,192 km2 (1,232 sq mi)
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்20,48,008
 • அடர்த்தி640/km2 (1,700/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
வட்டங்கள்4
பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்களுடன் கூடிய குஜராத் மாவட்டத்தை (பச்சை நிறம்) காட்டும் வரைபடம்

குஜராத் மாவட்டம் (Gujrat) (உருது: ضِلع گُجرات), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் குஜராத் ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

செனாப் ஆறு மற்றும் ஜீலம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள குஜராத் மாவட்டத்தின் வடக்கில் மிர்பூர் மாவட்டமும், வடகிழக்கில் ஜீலம் ஆறும், ஜீலம் மாவட்டமும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் குஜ்ரன்வாலா மாவட்டம் மற்றும் சியால்கோட் மாவட்டமும், மேற்கில் மண்டி பகாவுத்தீன் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

3,192 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஜராத் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களையும் , கிராமங்களையும் கொண்டது. அவற்றுள் முக்கியமானவைகள் ஜலால்பூர் ஜட்டான், சக்தினா, கர்னானா, குஞ்சா, சேக்னா மற்றும் லலாமூசா ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

குஜராத் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக குஜராத், கரியான் மற்றும் ஜலால்பூர் ஜாத்தன் என மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]இம்மாவட்டம் 119 கிராம ஒன்றியக் குழுக்களையும், 1065 வருவாய் கிராமங்களையும், நான்கு நகராட்சி மன்றங்களையும், ஒரு இராணுவப் பாசறை ஊரையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

3192 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஜராத் மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 20,48,008 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1026256 (50.10%); பெண்கள் 1021752 ( 49.89%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.4% ஆண்கள் வீதம் உள்ளது. மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 641.6 நபர்கள் வீதம் உள்ளது. நகர்ப்புற மக்கள் தொகை 5,68,172 (27.74%) ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 62.2% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 73.0%; பெண்களின் எழுத்தறிவு 51.6% ஆகவுள்ளது. 1981 – 1998 காலகட்டத்தில் 2.22% வீதம் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

குஜராத் மாவட்டத்தின் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பம் 50° செல்சியஸ் வரையிலும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 2° செல்சியஸ் அளவிற்கும் குறைவாக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 750 மில்லி மீட்டராகும்.

கல்வி[தொகு]

குஜராத் மாவட்டத்தில் 1,475 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது.[3]இதில் 889 (60%) பள்ளிகள் பெண்களுக்கானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of tehsils with respect to districts - Government of Pakistan". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  3. "Punjab Annual Schools Census Data 2014-15". Archived from the original on 19 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_மாவட்டம்&oldid=3581639" இலிருந்து மீள்விக்கப்பட்டது