யோகான் கோட்பிரீடு கல்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான் கோட்பிரீடு கல்லே
Johann Gottfried Galle
யோகான் கோட்பிரீடு கல்லே
பிறப்புஜூன் 9, 1812
இரேடிசு, செருமனி
இறப்புஇறப்பும் அகவையும்
போட்சுடாம், செருமனி
தேசியம்செருமானியர்
துறைவானியல்
பணியிடங்கள்பெர்லின் வான்காணகம்
பிரெசுலாவு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநெப்டியூன் கண்டுபிடிப்பு
விருதுகள்இலாலண்டே பரிசு (1839)
கையொப்பம்
யோகான் கோட்பிரீடு கல்லே, 1880
கல்லே கையெழுத்து
விட்டென்பர்கில் உள்ள நினைவுப் பட்டயம்

யோகான் கோட்பிரீடு கல்லே (Johann Gottfried Galle) (9 ஜூன் 1812 – 10 ஜூலை 1910) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் செருமனி இரேடிசைச் சார்ந்தவர். இவர் பெர்லின் வான்காணகத்தில் 1846 செப்டம்பர் 23 இல் தன் மானவரான என்றிக் உலூயிசு தெ அரெசுட்டுவுடன் இணைந்து நெப்டியூனை முதன்முதலாக தான் நோக்குவது நெப்டியூன் தான் என்ற உறுதியோடு கண்டுபிடித்தார் . [[உர்பெய்ன் இலெ வெரியர் நெப்டியூன் நிலவுவதையும் அதன் சரியான இருப்பையும் முன்கணித்தார். இந்த வான்கோள ஆயங்கலை வெரியர் கல்லேவுக்கு அனுப்பிவைத்துச் சரிபார்க்கச் சொன்னார். அன்றிரவே கல்லே அவர் குறிப்பிட்ட முன்கணித்த இடத்தில் இருந்து ஒரு பாகை தள்ளி நெப்டியூனைக் கண்டுபிடித்தார். இது வானியக்கவியலுக்கு மிகப்பெரும் வெற்றியாக விளங்கியது. இந்நாள் 19 ஆம் நூற்றாண்டு அறிவியலிலேயே குறிப்பிட்த்தக்க நாளாகும்.

இளம்பருவம்[தொகு]

கல்லே கிராப்பன்கைனிசென் நகருக்கு அருகில் அமைந்த இரேடிசுக்கு இரு கி.மீ தள்ளியிருந்த பாப்சுவுட் வீட்டில் பிறந்தார். இவரது தந்தையார் யோகான் கொட்பிரீடு கல்லெ (1790-1853) ஆவார். இவரது தாயார் பன்னியர் எனப்படும் என்றியேட்டே (1790–1839) ஆவார்.[1] இவரது தந்தையார் தார் அடுப்பு இயக்கியவர் ஆவார். இவர் விட்டென்பர்கு பள்லியில் படித்தார். பின்னர் பெர்லின் அம்போல்ட் பல்கலைக்கழகத்தில் 1830 முதல் 1833 வரை கல்வி பயின்றார். பிரகு கூபென் பள்ளியில் கணிதவியல், இயற்பியல் ஆசிரியர் ஆனார். பின்னர், பெர்லின் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

பெர்லின் வான்காணகம்[தொகு]

புதிய பெர்லின் வான்காணகம் முழுமையடைந்த்தும், கல்லே 1835 இல் யோகான் பிரான்சு என்கே அவர்களிடம் உதவியாலராகச் சேர்ந்தார்.அங்கே இவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தார். அப்போது ஜோசப் வான் பிரான்கோபரின் 9 அங். (22.5 செமீ) பொருள்வில்லையுள்ள தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். இவர் 1838 இல் காரிக்கோளின் உள்வலயத்தைக் கண்டுபிடித்தார். 1839 திசம்பர் 2 இல் இருந்து 1840 மார்ச்சு 6 வரையிலான கால இடைவெளியில் இரண்டு புதிய வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். கல்லேவுக்கு 1845 இல், முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரது முனவர் பட்ட ஆய்வுரை 1706 ஆம் ஆண்டு அக்தோபர் 20 முதல் 23 வரையிலான நாட்களில் ஓலே உரோமரின் விண்மீன்கள், கோள்கள் வான் நடுவரைக்கடப்புகலைப் பற்றிய நோக்கீடுகளை உய்யநிலையில் ஆய்வு செய்து விவாதிப்பதே ஆகும்.

நெப்டியூன் கண்டுபிடிப்பு[தொகு]

இவர் 1845 கால அளவில் தன்னுடைய ஆய்வுரைyiன் படி ஒன்றை உர்பைன் லெ வெர்னருக்கு அனுப்பியிருந்தார். அதற்கான பதிலை ஓராண்dடுக்குப் பிறகே பெற்றுள்ளார். இந்தப் பதில் 1846 செப்டம்பர் 18 இல் அனுப்பட்டு, கல்லேவுக்கு செப்யம்பர் 23 இல் வந்து சேர்ந்தது.

வெரியேர் வருணன்(யுரேனசு) கோள் வட்டணையின் சிற்றலைவுகளை ஆய்வு செய்யும்போது இதிலிருந்து இதுவரை கண்டறியாத கோள் ஒன்றின் இருப்பைக் கொணர்ந்தார். இவர் வானில் தான் கணக்கிட்ட இடத்தில் அக்கோளைத் தேடும்படி கல்லேவை வேண்டிக் கொண்டார்.அந்த இரவிலேயே (என்கே ஒப்புதலைப் பெற்று, அவரது கண்ணோட்டத்துக்கு மாறாக, என்றிசு உலூயிசு தெ அரெசுட்டு உதவியுடன், கல்லே 8 ஆம் பொலிவுத் தரத் தோற்றப் பருமையுள்ள வான்பொருளை, கணக்கிட்ட இருப்பிலிருந்து ஒரு பாகைக்கு அப்பால் கண்டுபிடித்தார். ஆனால், இதுபெர்லினெர் கல்வியாளரான சுட்டெர்ன்கார்த்தேவால் பதிவு செய்யப்படவில்லை. அடுத்த இரண்டு நாள் மாலை வேளைகளில், அந்த வான்பொருளின் இயல்பியக்கம் 4 வில்நொடி பருமையி ல் அளக்கப்பட்டது. எனவே இது ஒரு கோள்தான் என முழுமையாக அறியப்பட்டது. கல்லே நெப்டியூனைத் தான் கண்டுபிடித்ததாக அறிவிக்க மறுத்து வெரியேருக்கே அத்தகுதியை உரியதாக்கினார்.

இவர் 1847 இல் கோனிகுசுபெர்கு வான்காணகத்தின் இயக்குநராக பிரெடெரிக் வில்கெல்ம் பெசலுக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டார். நான்காம் பிரெடெரிக் வில்கெல்ம் அரச சட்டப்படி அறிவிக்கும் முன்பே இவர் இயல்பாக பணியில் சேர்க்கப்பட்ட்தால் இதற்கு கார்ல் கசுத்தோவ் யாகோகோபு யாகோபி மறுப்பு தெரிவிக்கவே இவர் தன் விண்ணப்பத்தை1848 இல் திரும்ப்ப் பெற்றார்.[2]

பிரெசுலாவு வான்காணகம்[தொகு]

இவர் 1851 இல் கள வான்காணகம் ஒன்றின் இயக்குநராக பிரெசுலாவுக்குச்(இன்றைய உரோக்லாவுக்குச்) சென்றார். இவர் 1856 இல் பிரெசுலாவு பிரெடெரிக் வில்கெல்ம் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர் ஆனார். இவர் பிரெசுலாவில் 45 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் 1875/76 ஆண்டின் கல்விப் புலமுதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]பிரெசுலாவில் கோள்வட்டணைகளைத் துல்லியமாகத் தீர்மானிப்பதில் ஆய்வு செய்தார். புவிமுனைக் கனல்களின் உயரத்தையும் விண்கற்களின் தடத்தையும் கணக்கிடும் முறைகளை உருவாக்கினர். மேலும், 1884 வரை கண்டறியப்பட்ட 414 சிறுகோள்களின் தகவல்களைத் தமகனின் உதவியோடு ஒரே wநூலில் திரட்டினார். மற்றபடி இவர் புவிக் காந்தப்புல ஆய்விலும் காலநிலையியலிலும் அக்கறை காட்டையுள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 200 ஆய்வுப்பணிகளை வெளியிட்டுள்ளார்.

பிந்தைய வாழ்க்கை[தொகு]

கல்லே 1897 இல் போட்சுடாமுக்குத் திரும்பினார். அங்கே இவர் தன் 98 ஆம் அகவையில் இறந்தார். இவர் மனைவியும் இரு மகன்களாகிய ஆந்திரேயாசு கல்லேவும் ஜார்ஜ் கல்லேவும் இவரைப் பிரிந்து வாழ்ந்தனர்.

கிராப்பன்கைனிசெனில் (Gräfenhainichen)இவருக்கு ஒரு நினைவுச் சின்னம் 1977 இல் எழுப்பப்பட்டுள்ளது.

கல்லே நிலாக் குழிப்பள்ளமும் ஏப்பி பேசு எனும் செவ்வாய்க் கல்லே குழிப்பள்ளமும் ஆகிய இருமொத்தல் குழிப்பள்ளங்கள் இவர் பெயர் இடப்பட்டுள்ளன.குறுங்கோள் 2097 கல்லே, நெப்டியூன் வலயங்களும் இவர் பெயரில் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58496.html. பார்த்த நாள்: August 22, 2012. 
  2. Diedrich Wattenberg: Nach Bessels Tod - Eine Sammlung von Dokumenten. Veröffentlichungen der Archenhold-Sternwarte Berlin-Treptow Nr.7. 1976
  3. "Rektoratsreden (HKM)". Archived from the original on 2015-01-15. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளி இணைப்புகள்[தொகு]

Google celebrated Johann Gottfried Galle's 200th Birthday with Google Doodle https://www.google.com/doodles/johann-gottfried-galles-200th-birthday!

நினைவேந்தல்கள்[தொகு]

வானியல் காட்சிப் படிமங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_கோட்பிரீடு_கல்லே&oldid=3625940" இலிருந்து மீள்விக்கப்பட்டது