ஏபர் தவுசுட் கர்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏபர் தவுசுட் கர்டிசு
Heber Doust Curtis
பிறப்பு(1872-06-27)சூன் 27, 1872
முசுக்கேகன், மிச்சிகன்
இறப்புசனவரி 9, 1942(1942-01-09) (அகவை 69)
ஏன் ஆர்பர் (மிச்சிகன்)
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 1 [1]
(23400) A913 CF பிப்ரவரி 11, 1913 MPC

ஏபர் தவுசுட் கர்டிசு (Heber Doust Curtis) (ஜூன் 27, 1872 – ஜனவரி 9, 1942)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சூரிய ஒளிமறைப்புகளை ஆய்வு செய்ய, 11 வானியல் தேட்டங்களில் ஈடுபட்டார்.[2]

வாழ்க்கை[தொகு]

இவர் 1872 ஜூன் 27 இல் பிறந்தார். இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு. இவரது தாயார் சாரா எலிசா தவுசுட்.[3]

இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியல் பட்டம் பெற்றார்.

இவர் இலிக் வான்காணகத்தில் 1902 முதல் 1920 வரை பணிபுரிந்தார். இவர் ஜேம்சு எட்வார்டு கீலர் அவர்களின் ஒண்முகில்களின் அளக்கையைத் தொடர்ந்தார். இவர் 1912 இல் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1918 இல் மெசியர் 87 பால்வெளியை நோக்கிக் கண்டறிந்தார். இவர் முதன்முதலாக, பால்வெளி முனைத்தாரையைக் கண்ணுற்றார். இதை இவர் "மெல்லிய பொருண்மக் கோட்டால் பால்வெளிக்கருவுடன் இணைந்த வியப்புமிக்க நீள்கதிர்க்கற்றை" என விவரித்தார்.[4][5]

இவர் 1920 இல் அலெகனி வான்காணக இயக்குநராக அமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் இவர் ஆர்லோவ் சேப்ளே அவர்களுடன் ஒண்முகில்கள், பால்வெளிகளின் தன்மைபற்றியும் புடவியின் உருவளவு பற்றியும் நடந்த பெருவிவாதத்தில் பங்கேற்றார். இவர் தற்போது ஏற்கப்பட்டுள்ள பால்வெளிகள் பற்றிய கண்ணோட்டத்தை முன்மொழிந்தார்.

இவர் 1925 இல் படலத் தட்டு ஒப்பீட்டளவியின் ஒரு வடிவமைப்பை புதிதாக உருவாக்கினர். இது ஒரே தடவையில் 8×10 சத்ர அங்குல அளவுகொண்ட இரண்டு தட்டுகளை பட்டக அணிகளைப் பயன்படுத்தி, வழமானபடி தட்டுகளை அடுத்தடுத்து பக்கத்தில் வைக்காமல், அடுக்குகளாகச் சேர்த்துப் பின் உரிய திசைவைப்பில் இருத்தினார். இதனால் கருவியின் உடல் 60×51 செ.மீ பரப்பளவை அளக்க முடிந்துள்ளது. இந்தக் கருவி 2011 ஆகத்து வரை இலிக் வான்காணகத்தில் பொட்டலமாக்க் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இக்கருவி பற்றிய விவரிப்பு அலெகனி வான்காணக வெளியீடுகளில் தொகுதி எட்டு: பகுதி இரண்டில் வெளியிடப்பட்டது.

இவர் 1930 இல் மிச்சிகன் பல்கலைக்கழக வான்காணகங்களின் இயக்குநராக அமர்த்தப்பட்டார்.என்றாலும் ஆன் ஆர்போரில் இவர் பல்கலைகழகத்துக்காக வடிவமைத்த பேரளவு ஒலித்தெறிப்புத் தொலைநோக்கியை கட்டியமைத்தல், பெரும்பொருளியல் சரிவின் நிதிப் பற்றாக்குறையால்தவிர்க்கப்பட்டது. இவர் மெக்மாத்-உல்பர்ட் தனையார் வான்காணகத்தை அங்கேலசு ஏரி எனுமிடத்தில் உருவாக்குவதில் பங்களித்துள்ளார்.

இவர் 1942 ஜனவரி 9 இல் இறந்தார்.[2]

தகைமை[தொகு]

  • ஏபர் தவுசுட் கர்டிசு நினைவுத் தொலைநோக்கி.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
  2. 2.0 2.1 "Dr. Heber Curtis, An Astronomer, 69. Chairman of Department at the University of Michigan Is Dead in Ann Arbor. Saw 11 Solar Eclipses. Had Served as Head of Lick Observatory in Chile. Won Many Honors for Work". த நியூயார்க் டைம்ஸ். January 10, 1942. http://select.nytimes.com/gst/abstract.html?res=F60A1FFA3D58167B93C2A8178AD85F468485F9. பார்த்த நாள்: 2014-01-12. "Dr. Heber D. Curtis, chairman of the Department of Astronomy at the University of Michigan, died at his home here last night at the age of 69. He won national ..." 
  3. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58324.html. பார்த்த நாள்: August 22, 2012. 
  4. Heber Doust Curtis (1918). "Descriptions of 762 Nebulae and Clusters Photographed with the Crossley Reflector". Publications of the Lick Observatory (University of California Press) 13: 31. https://books.google.com/?id=HYnnAAAAMAAJ. பார்த்த நாள்: 2010-04-26. 
  5. "A Cosmic Blowtorch in Hubble's Viewfinder". த நியூயார்க் டைம்ஸ். July 11, 2000. http://partners.nytimes.com/library/national/science/071100sci-nasa-hubble.1.jpg.html. பார்த்த நாள்: 2014-01-12. "Ever since Heber Curtis, a University of California astronomer, spied a ray of light shooting out of M87's core in 1918, astronomers have puzzled over the nature and origin of this jet and dozens of others discovered over the years shooting from the cores of active galaxies and quasars." 
  6. "Mt. Wilson Observer Reveals Findings on Groups but Calls Data Tentative". த நியூயார்க் டைம்ஸ். June 24, 1950. http://select.nytimes.com/gst/abstract.html?res=F70A10FD3959157B93C6AB178DD85F448585F9. பார்த்த நாள்: 2014-01-12. "The symposium is part of the program preceding the dedication tomorrow of the Heber Doust Curtis Memorial Telescope, a $200000 instrument installed at a ..." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபர்_தவுசுட்_கர்டிசு&oldid=3236745" இலிருந்து மீள்விக்கப்பட்டது