குத்பா பள்ளிவாசல், புதுச்சேரி

ஆள்கூறுகள்: 11°56′N 79°08′E / 11.93°N 79.13°E / 11.93; 79.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குத்பா பள்ளிவாசல்,புதுச்சேரி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புதுச்சேரி
புவியியல் ஆள்கூறுகள், புதுச்சேரி, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்11°56′N 79°08′E / 11.93°N 79.13°E / 11.93; 79.13
சமயம்இசுலாம்

குத்பா பள்ளிவாசல் (Khutba Mosque) இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள பள்ளிவாசல் ஆகும்.

இப்பள்ளிவாசல் ஜும்ஆ பள்ளிவாசல் எனவும் அழைக்கப்படுகிறது. பிரான்சு காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்திலும் இப்பள்ளிவாசல் இப்பகுதியில் நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தின் உதாரணமாக திகழ்ந்தது.[1]

வரலாறு[தொகு]

குத்பா பள்ளிவாசல் புதுச்சேரியின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம். 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் காலனியான புதுச்சேரி நகரின் தெற்கு பகுதியில் இசுலாமிய மக்கள் குடியேறினர். அப்பகுதி தெருக்கள் அனைத்தும் சவூதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி அமைந்திருந்தது.[2]

அமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசலில் சிறிய ஹவுஸ் உள்ளது. ரமலான் நோன்பு காலத்தில் சமையல் செய்வதற்கான அறை, குவிமாடம், மினார் ஆகியவை உள்ளன.அழகான ஹவுஸ் பிரான்சு கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.[2]

வழிபாடு[தொகு]

இப்பள்ளிவாசலில் தினமும் ஐந்து நேர தொழுகை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சிறப்பு ஜும்ஆ தொழுகையும் நடைபெறும். வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் தமிழ் மொழியில் நடைபெறும்.[2]

தர்கா[தொகு]

குத்பா பள்ளிவாசல் வளாகத்தில் மௌலா சய்யுபும் எனும் சூபி ஞானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மௌலா சையுபா குத்பா எனும் இந்த ஞானியின் பெயரால் இது குத்பா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.[3]

மர்கஸ்[தொகு]

இப்பள்ளிவாசல் வளாகத்தில் புதுச்சேரி தப்லீக் ஜமாஅத்தின் தலைமை மர்கஸ் அமைந்துள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jamia Mosque in Pondicherry – Pondy Tourism". Archived from the original on 2019-12-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
  2. 2.0 2.1 2.2 Pondicherry, India City Stylish French film 'Life of Pi'[தொடர்பிழந்த இணைப்பு] detik.com, 11/12/2012.
  3. "Khutba Mosque, Pondicherry, Pondicherry". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
  4. "Khutba Palli Masjid, Pondicherry, Pondicherry 605 001, India – Islamic Centers, Masjids Mosques, Muslim Owned Businesses, Islamic Schools and Colleges".