மெத்தக்ரைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தக்ரைலேட்டு (Methacrylate) என்பது மெத்தக்ரைலிக் அமிலத்தின் வழிப்பொருட்கள் என்பதைக் குறிக்கிறது. இவ்வழிப்பொருட்கள் தாய் அமிலம் (CH2C(CH3)CO2H) சார்ந்த உப்புகள் (உதாரரணம்: CH2C(CH3)CO2−Na+) எசுத்தர்கள் (உதாரணம்: CH2C(CH3)CO2CH3) அல்லது மெத்தில் மெத்தக்ரைலேட்டு மற்றும் இவ்வினத்தைச் சேர்ந்த பலபடிகளை உள்ளடக்கியதாகும் [1].

நெகிழிப்பலபடிகளில் மெத்தக்ரைலேட்டுகள் பொதுவான ஒற்றைப்படிகளாக கருதப்படுகின்றன. இவை அக்ரைலேட்டு பலபடிகளாக உருவாகின்றன. இவற்றில் உள்ள இரட்டைப் பிணைப்புகள் வினைத்திறம் மிக்கவை என்பதால் மெத்தக்ரைலெட்டுகள் எளிதாக பலபடிகளாக உருவாகின்றன. ஒற்றைப்படி பிசினாக மெத்தக்ரைலெட்டுகள் சிலவகை கண்ணாடி பழுதுபார்க்கும் கருவிகளில் பயன்படுகின்றன. மற்றும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மெத்தக்ரைலேட்டு என்ற சொல் பொதுவாக அக்ரைலேட்டு மற்றும் மெத்தக்ரைலேட்டுகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Manfred Stickler, Thoma Rhein "Polymethacrylates" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a21_473
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தக்ரைலேட்டு&oldid=2222275" இலிருந்து மீள்விக்கப்பட்டது