கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் குருங்களூர் வட்டத்தில் குருங்களூர் என்னுமிடத்திற்கருகே கடகடப்பை அக்கிரகாரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ராஜராஜேசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி என்றழைக்கப்படுகிறார்.

அமைப்பு[தொகு]

மூலவர் விமானமும், இறைவி விமானமும்

மிகவும் சிறிய கோயிலாக உள்ள இக்கோயிலில் , இறைவி. நுழைவாயிலை அடுத்து சிறிய மண்டபம் போன்ற அமைப்பு உள்ளது. மூலவர் சன்னதியின் வலப்புறம் நாகரும், விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. மூலவருக்கு இடது புறமாக இறைவியின் சன்னதி உள்ளது. இறைவியின் சன்னதிக்கு வலது புறம் தட்சிணாமூர்த்தியும், இடது புறம் தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். அருகே சூரியன் காணப்படுகிறார். லிங்கம் போன்ற அமைப்பில் பாணம் இருக்கும் இடத்தில் சூரியன் வித்தியாசமான நிலையில் காணப்படுகிறார்.

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்[தொகு]

இக்கோயில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய கோயில்களில் ஒன்றாகும். கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் என்பதானது கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றாங்கரை தஞ்சபுரீசுவரர் கோயில், திட்டை வசிஷ்டேசுவரர் கோயில், கூடலூர் சொக்கநாதர் கோயில், கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில், பூமால்ராவுத்தர் தெருவிலுள்ள வைத்தியநாதேசுவரர் கோயில் ஆகிய கோயில்களை உள்ளடக்கியதாகும். கரந்தட்டாங்குடி வசிஷ்டேஸ்வரர் கோயிலில் கிளம்புகின்ற கண்ணாடிப் பல்லக்கு மிகவும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு பிற பல்லக்குகளுடன் அனைத்து சப்தஸ்தானங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியில் கரந்தட்டாங்குடியை வந்தடையும். பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலில் 2 செப்டம்பர் 1990 அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]