இமாம் நஸாயீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாம் நஸாயீ
பிறப்பு214 இ.நா (கி.பி. 829 )
நஸா, தற்போதைய துர்க்மெனிஸ்தான்[1]
இறப்பு303 இ.நா (915 கி.பி.)
ரம்லா அல்லது மக்கா
இனம்பாரசீகம்
பணிஇஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
மதப்பிரிவுஇசுலாம்
சட்டநெறிஷாபி
ஆக்கங்கள்அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா

இமாம் நஸாயீ (Al-Nasā'ī அரபு மொழி: النسائي‎) பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார்.[2]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[3].[4]

பிறப்பு[தொகு]

நஸா என்ற ஊரில் இ.நா 214 ( கி.பி. 829 ) வருடத்தில் பிறந்தார். நஸா என்ற நகரில் பிறந்தமையால் அபூ அப்திர் ரஹ்மான் நஸாயீ என்று அழைக்கப்படுகிறார். ஷுஐப் என்பவர் இவர்களின் தகப்பனாராவார். இவரது இயற்பெயர் அஹ்மத்.

கல்வி[தொகு]

இ.நா 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.

இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்[தொகு]

ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து.

இவரது ஆசிரியர்கள்[தொகு]

குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் முகம்மது அல்-புகாரி மற்றும் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ஆகியோரின் ஆசிரியர்கள் ஆவர்.[5]' இப்ராகிம் இப்னு யாகூப் இவரின் ஆசிரியர் ஆவார்.[6]

இவரது மாணவர்கள்[தொகு]

இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.

இவரது படைப்புகள்[தொகு]

அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை உட்பட 15 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் 6 நூல்கள் அறிவியலை விளக்கும் ஹதீஸ் நூல்கள்.[7]

இறப்பு[தொகு]

இமாம் நஸாயீ 73 ஆம் வயதில் பாலத்தீனத்தில் 13 ம் தேதி சஃபர் மாதம் இ.நா 303 ( கி.பி. 915) இல் இறந்தார்.தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.uga.edu/islam/hadith.html
  2. Ludwig W. Adamec (2009), Historical Dictionary of Islam, p.138. Scarecrow Press. ISBN 0810861615.
  3. Various Issues About Hadiths
  4. Jonathan A.C. Brown (2007), The Canonization of al-Bukhārī and Muslim: The Formation and Function of the Sunnī Ḥadīth Canon, p.10. Brill Publishers. ISBN 978-9004158399. Quote: "We can discern three strata of the Sunni hadith canon. The perennial core has been the Sahihayn. Beyond these two foundational classics, some fourth/tenth-century scholars refer to a four-book selection that adds the two Sunans of Abu Dawud (d. 275/889) and al-Nasa'i (d. 303/915). The Five Book canon, which is first noted in the sixth/twelfth century, incorporates the Jami' of al-Tirmidhi (d. 279/892). Finally the Six Book canon, which hails from the same period, adds either the Sunan of Ibn Majah (d. 273/887), the Sunan of al-Daraqutni (d. 385/995) or the Muwatta' of Malik b. Anas (d. 179/796). Later hadith compendia often included other collections as well.' None of these books, however, has enjoyed the esteem of al-Bukhari's and Muslim's works."
  5. "هل سمع الإمام النسائي من الإمام البخاري" (in Arabic).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Al-Bastawī, ʻAbd al-ʻAlīm ʻAbd al-ʻAẓīm (1990). Al-Imām al-Jūzajānī wa-manhajuhu fi al-jarḥ wa-al-taʻdīl. Maktabat Dār al-Ṭaḥāwī. பக். 9. 
  7. Frye, ed. by R.N. (1975). The Cambridge history of Iran. (Repr. ). London: Cambridge U.P.. பக். 471. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-20093-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_நஸாயீ&oldid=2716880" இலிருந்து மீள்விக்கப்பட்டது