இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ralph Asher Alpher
1950
பிறப்பு(1921-02-03)பெப்ரவரி 3, 1921
வாசிங்டன், டி. சி., அமெரிக்கா
இறப்புஆகத்து 12, 2007(2007-08-12) (அகவை 86)
ஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஅண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் மற்றும் வானியற்பியல்
பணியிடங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
யூனியன் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜார்ஜ் காமாவ்
அறியப்படுவதுநியூக்ளியோசிந்தசிசின் முதல் நவீன இயற்பியல் கோட்பாடு மற்றும் 1948 இல் காஸ்மிக் நுண்ணலைகள் பின்னணி கதிர்வீச்சின் கணிப்பு.
விருதுகள்மெகல்லானியப் பிரீமியம் (1975)
என்றி டிரேப்பர் பதக்கம் (1993)
தேசிய அறிவியல் பதக்கம் (2005)

இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர் (Ralph Asher Alpher) (பிப்ரவரி 3, 1921 – ஆகத்து 12, 2007)[1][2] ஓர் அமெரிக்க வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

ஆல்ப்பர் பேலோருசியா, விதப்சுக் எனும் இடத்தில் இருந்து புலம்பெயர்ந்த யூதரான சாமுவேல் ஆல்ப்பரின் மகன் ஆவார். இவரது தாயார் உரோசு ஆவார். இவரது தாயார் வயிற்றுப் புற்றால் 1938 இல் இறந்துவிட்டார். எனவே தந்தையார் மறுமணம் செய்துக் கொண்டார். இவர் தியோடோர் உரூசுவெல்ட் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைத் தம் 15 ஆம் அகவையில் முடித்தார். இவர் பள்ளி இளம் அலுவலர் பயிற்சிச் சாரணப்படையின் படைமேலராகவும் கட்டளையாளராகவும் விளங்கினார். இவர் பள்ளியில் அரங்கு மேலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். இது குடுமப வருவாய்க்குப் பெரிதும் உதவியுள்ளது. இவர் அப்போது குறுக்கெழுத்துப் பயிற்சியும் பெற்றுள்ளார். இவர் 1937 இல், அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் இயக்குநருக்குக் குறுக்கெழுத்தாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் 1940 இல் கார்னிகி அறக்கட்டளையின் புவிக் காந்தத் துறையால் பணிக்கு அமர்த்தப்பட்டார். இங்கு இவர் இரண்டாம் உலகப்போர் சார்ந்த ஆய்வுப் பணிக்காக அமெரிக்க நாவாய்த் துறை ஒப்பந்தத்தில் முனவர் இசுகாட் போர்புசு கீழ் பணிபுரிந்தார். இங்கு இவர் கப்பல் அழுத்தங்குறைப்பு நுட்பங்களை வகுத்துப் பயன்படுத்தி அவற்றின் திறமையை மதிப்பீடும் செய்ய வேண்டும். இவர் மார்க்கு 32 மார்க்கு 45 ஆகிய வெடிமருந்துகள் உருவாக்கல், நீர்மூழ்கிக் குண்டுகள், நாவாய் துமுக்கிக் கட்டுபாடு போன்ற படைத்துறை சார்ந்த கமுக்கமான பணிகளில் பங்களித்துள்ளார். போரின் முடிவில்அமெரிக்க நாவாய்த் துறையிலும் அமெரிக்க ஆராய்ச்சி, புத்துருவாக்கத்திலும் செய்த தன் உயர்தரப் பணிக்காக, நாவாய் படைக்கல வளர்ச்சி விருதை 1945 திசம்பர் 10 இல் பெற்றுள்ளார்.இவரது போர்க்காலப் பணிகள் எதையும் அறியமுடியவில்லை. இவர்1944 முதல் 1955 வரை ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகப் பயன்முறை இயற்பியல் துறை ஆய்வக்த்தில் சேர்ந்தார். பகலில் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைக்களையும் அதன் காப்பமைப்புகளையும் சார்ந்த பிற பணிகளையும் உருவாக்குவார். 1948 இவர் தன் முனைவர் பட்டத்தை இயற்பியலில் பெற்றார், இவரது முனைவர் பட்டத் தலைப்பு நொதுமிக் கவர்தல் எனும் அணுக்கருத் தொகுப்புக் கோட்பாடு ஆகும். இவர் 1948 இல் இருந்து, பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் இராபர்ட்டு எர்மனுடன் இணைந்து நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு முன்கணிப்புகளை வெளியிட்டார். இவர் தன் படைக்கலத்துறைப் பணிகளில் ஈடுபடுவதில் இருமனநிலையைக் கொண்டிருந்தார்.[3]

இவர் தன் 16 ஆம் அகவையில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்விநல்கையைப் பெற்றுள்ளார். என்றாலும் அந்நிறுவன முன்னாள் மாணவரை வாழ்சிங்டன் டி. சி, இல் சந்தித்து பெற்ற அறிவுரையின் பேரில் அந்நல்கையைப் பெறுவதில் இருந்து பின்வாங்கினார்.[4] மாறாக, இவர் ஜார்ஜ் வாழ்சிங்டன் பலகலைக்கழகத்தின் பட்டத்தையும் சிறப்பு மேற்படிப்புப் பட்டங்களையும் இயற்பியலிலும் நாவாய்த்துறையிலும், ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் இயற்பியலாளராகப் பணிபுரிந்தவாறே, பெற்றுள்ளார். இவர் அப்பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற உருசிய இயற்பியலாளர் காமாவைச் சந்தித்து அவரிடம் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்ந்துள்ளார். இது பிறகு ஒரு சதிப்பின்னலாக அமைந்துவிட்டுள்ளது. காமாவ் நன்கறிந்த, சோவியத்து விட்டுவந்து ஜான் ஆப்கின்சுப் பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்த பகைப்புலம் கொண்டவர். காமாவின் கோட்பாட்டாக்கத்துக்கு ஆல்ப்பர் கணிதவியலாகப் பெரும்பணிகளைச் செய்யவேண்டி நேர்ந்துள்ளது.

ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது ஆல்ப்பர் உலூயிசைச் சந்தித்துள்ளார். உலூயிசு அப்போது இரவுப் பள்ளியில் உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் பகலில் அரசுத் துறையில் செயலராகப் பணிபுரிந்துக் கொண்டிருந்துள்ளார். பியர்ல் துறைமுகத்தைத் தாக்கிய இருமாதங்களுக்குப் பிறகு, ஆல்ப்பரும் உலூயிசும் திருமணம் செய்துக் கொண்டனர். இதற்குள் ஆல்ப்பர அமெரிக்க நாவாய்த் துறைக்காகக் கார்னிகி நிறுவனம் வழியாக ஒன்றரை ஆண்டுகளாகப் பல அரிய பணிகளை நிறைவேற்றியிருந்தார். இவர் 1944 தொடக்கத்தில் அறிவியற்பணிகளுக்கு இடைவெளி ஏற்பட்டபோது, இவர் நாவாய்த் துறை ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இவர் அதற்கான முழுத்தகுதியை அப்போது பெற்றிருந்தார். இவர் இதுவரை பல கமுக்கமான தரம் வாய்ந்த பணிகளைச் செய்திருந்தாலும் இவரது பெயர் தேர்வுப் பட்டியலில்(விண்ணப்பித்தித்தோர் 70,000 பேருக்கு மேல் இருந்துள்ளனர்) வரவில்லை . இதில் இருந்து இவர் இப்பட்டியலில் இருந்தும் வராமல் தவிர்க்கப்பட்டுள்ளார் என அறிந்துள்ளார். அதே கோடையில் இவர் மீண்டும் ஜார்ஜ் ஆப்கின்சு பலகலைக்கழக பயன்முறை இயற்பியல் துறையில் மற்றொரு உயர்தரத் திட்டமொன்றில் பணிபுரியச் சேர்ந்தார். இப்பணி காந்தத் தாக்க நீர்மூழ்கிக் குண்டு தயாரிக்கும் பணியாகும். முந்தைய மார்க்கு-14 நீர்மூழ்கிக் குண்டு சரியாக தர ஓர்வு செய்யப்படாததாலும் வெடிக்கும் நிலையி தன் காந்தத் தாக்கத்தை இழந்துகொண்டிருந்ததாலும் நாவாய் படைத் தலைவர் இக்குண்டை 1943 இன் இறுதியில் தடை செய்திருந்தார். எனவே மாற்று நீர்மூழ்கிக் குண்டு உடனடியாகத் தேவைப்பட்டது . (V.S. ஆல்ப்பர், நீர்மூழ்கி மீள்பார்வை, அக்தோபர், 2009).

பெருவெடிப்பு அணுக்கருக் கோட்பாடு[தொகு]

ஆல்ப்பரின் 1948 ஆம் ஆண்டைய முனவர்பட்ட ஆய்வு, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு எனப்பட்டது. இந்தப் பெருவெடிப்பு எனும் சொல்லை பிரெடு ஆயில் 1950 ஆண்டில் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தில் பேசும்போது உருவாக்கி, விரிவுறும் புடவியின் தொடக்கநிலையை விவரிக்க அறிமுகப்படுத்தினார் இந்த பாழ்நிலைப் புடவி தொடங்குகையில் ஏராளமான பேரளவு அடர்த்தியையும் வெப்பநிலைகளையும் கொண்டிருந்தது. பெருவெடிப்புக்குப் பிறகு புடவியில் எளிய தனிமங்களில் இருந்து சிக்கலான உயர் எடைத் தனிமங்கள் அவற்றின் அணுக்கருத் தொகுப்பு நிகழ்வால் ஏற்பட்டன என விளக்கப்பட்டது. பெருவெடிப்பு நிகழ்ந்த உடனே, வெப்பநிலை மிகமிக உயர்வாக இருந்த நிலையில், நொதுமி(நியூட்ரான்), முதன்மி(புரோட்டன்) போன்ற துகள்கள் ஈர்ப்பு அணுக்கருசையால் பிணைந்தாலும், அவற்றைப் பேரடர்த்தியுடன் விளங்கிய உயர் ஆற்றல் ஒளியன்கள்(போட்டான்கள்) எனும் ஒளியாறறல் குவையங்கள் அவற்றைப் பிரித்துவிட்டன. அதாவது, உயர்வெப்பநிலையில் உள்ள ஒளியன்களின் இயங்காற்றல் அணுக்கரு வல்விசையின் பிணைப்பு விசையை விட வலிவாக இருந்தது. எடுத்துகாட்டாக, முதன்மியும் நொதுமியும் இணைந்து டியூட்ரியத்தை உருவாக்கினாலும், இது உயராற்றல் ஒளியன்களால் உடைத்துப் பிரிக்கப்பட்டுவிடும்.என்றாலும், நேரம் செல்ல செல்ல புடவி விரிவுற்றுக் குளிர்வதால் ஒளியன்களின் சராசரி ஆற்றல் குறைந்துவிடும். அப்போது ஒருநிலையில், அதாவது பெருவெடிப்புக்கு ஓரளவு ஒருமணித்துளிக்குப் பின்னர், அணுக்கருவின் ஈர்ப்பு விசை, தாழ் ஆற்றல் ஒளியன் விசையை வெல்லும் தகைமை அடைவதால், நொதுமிகளும் முதன்மிகளும் இணைந்து நிலைப்பு மிக்க டியூட்ரியம் அணுக்கருவை உருவாக்கும். புடவி மேலும் விரிவுற்றுக் குளிரும்போது மேலும் கூடுதலான அணுக்கருத்துகள்கள் இந்த எடைகுறைந்த அணுக்கருக்களுடன் பிணைந்து, எல்லியம்(ஈலியம்) போன்ற உயரெடைத் தனிமங்களை உருவாக்கும்.

எனவே பெருவெடிப்பு நீரகம்(ஐதரசன்), எல்லியம்(ஈலியம்), பிற உயரெடைத் தனிமங்களைச் சரியாகவும் பரவலாகவும் தொடக்கநிலைப் புடவியில் நிலவிய விகிதங்களில் உருவாக்குகிறதென ஆல்ப்பர் விவாதித்தார். ஆல்ப்பரும் காமாவும் உருவாக்கிய கோட்பாடு அனைத்து அணுக்கருக்களும் ஒவ்வொரு நொதிமியை உட்கவர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் ஓரணுப் பொருண்மை கூடியே உருவாகின்றனவென முதலில் முன்மொழிந்தனர். என்றாலும் இந்த தொடர் ஓரலகு உட்கர்தல் கோட்பாட்டின் பொதுமையாக்கத்துக்கு அறைகூவல் விட்டன. ஏனெனில், எல்லியத்துக்குப் பிறகான எந்த ஓரகத் தனிமங்களும் குறிப்பாக ஐந்து அணுப் பொருண்மை அல்லது எட்டு அணுப்பொருண்மை உள்ள எந்த ஓரகத் தனிமங்கள் ஏதுமே நிலையானவையாக அமையவில்லை.[5] இவரது ஆய்வுரை புதிய தடத்தைப் பதிக்கும் தகைமை கொண்டிருந்தமையால், ஆய்வுரையை அச்சு ஊடகம் சார்ந்தும் பிற வெளியீடுகள் சார்ந்தும் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாராட்டுகளும் ஆய்வு சார்ந்த பல முன்கணிப்புகளும் ஏன், ஒரு பல பெரிய இதழ்களில் எர்பிளாக்கின் விளக்கக் கேலிப்படங்களும் வெளியிடப்பட்டன. இந்த பாராட்டும் வரவேற்பும் முனைவர் பட்டம் சார்ந்த ஓர் ஆய்வுரைக்குக் கிடைத்தது மிகவும் எதிர்பாராததாகவே அமைந்தது.

பிறகு, அந்த ஆண்டே, இராபெர்ட்டு எர்மனுடன் இணைந்து, ஆல்ப்பர் பெருவெடிப்பில் விளைந்த அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் வெப்பநிலையை முன்கணித்தனர். [6] > என்றாலும் ஆல்ப்பரின் அண்டப் பின்னணிக் கதிர்வீச்சின் முன்கணிப்புகள், 1960 களின் தொடக்கத்தில் இராபெர்ட்டு தைக்கும் யாக்கோவ் செல்டோவிச்சும் மீள்கண்டுபிடிப்பு செய்யும் வரை மறக்கப்பட்டன. அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சும் அதன் வெப்பநிலைகளும் 1964 இல் செய்முறைகளால் நியூஜெர்சியில் உள்ள பெல் ஆய்வக இயற்பியலாளர்களான ஆர்னோ பெஞ்சியாசும் இராபெர்ட்டு வில்சனும் நிறுவினர். இவர்கள் இருவருக்கும் 1978 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.[7]

ஆய்வுக் கட்டுரையில் அவரது பெயர் இருந்தாலும், மேன்சு பெத்தே]] இக்கோட்பாட்டு உருவாக்கத்தில் நேரடியான பங்கேற்கவில்லை; ஆனால், பின்னர் பெத்தே இத்தலைப்புகளில் பணிபுரிந்துள்ளார்; காமாவ் இவரது பெயரைச் சேர்த்து கட்டுரையாசிரியர் பட்டியலில் ஆல்ப்பர்-பெத்தே-காமவ் என வரும்படி, அதாவது பெயர்ப்பட்டியலில் முதலெழுத்துகள், ஆல்பா, பீட்டா, காம்மா]] (α, β, γ) எனக் கிரேக்க எழுத்துகளின் இரட்டுறலாக அமைவதற்காக உருவாக்கியுள்ளார்.[8] இவ்வாறு, தனித்து உருவாக்கிய ஆல்ப்பரின் ஆய்வுரை, இயற்பியல் மீள்பார்வை இதழில் மூவர் பெயரில் முதலில் 1948, ஏப்பிரல், 1 இல் வெளியானது.[9]தந்திரம் வாய்ந்த காமாவ் இந்த இரட்டுறல் நகைச்சுவையைப் பொருத்தியது ஆல்ப்பரின் கோட்ப்பாட்டு உருவாக்க உயர்பணியை மங்கச் செய்தது. இந்தக் கட்டுரையின் மையக்கரு, பின்னர்ஏற்புபெற்ற, இவரது முனைவர் பட்ட ஆய்வை மட்டுமே சார்ந்ததாகும். இக்கட்டுரையைப் படித்த மற்ற அறிஞர்கள் பெத்தேவும் காமாவும் தாம் முதன்மைப் பங்களிப்பாளராகக் கருதச் செய்துவிட்டது. ஆல்ப்பரின் அணுக்கருத் தொகுப்புக்கும் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு முன்கணிப்புக்கும் தேசிய அறிவியல் பதக்கம் தரப்பட்டதும் பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு இவர் ஆற்றிய ஆய்வுகள் அறியப்படலாயின. இந்தப் பரிந்துரைக்கு நீல் திகிரீசு தய்சன் பொறுப்பு ஏற்றுள்ளார். ( 2007 ஜூலை, 26 ஆம் நாளைய நீல் திகிரீசு தய்சனின் விக்டர் ஆல்ப்பருக்கான சொந்தக் கடிதத் தொடர்பு).

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

ஆல்ப்பரும் இராபெர்ட்டு எர்மனும் 1993 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி திரேப்பர் பதக்கத்தைப் பெற்றனர்.[10] இவர்களுக்கு அமெரிக்க மெய்யியல் கழகம் 1975 இல் மெகல்லானிய முன்முனைவு விருதை வழங்கியது. இவர்களுக்குப் பெல்ஜியம் அறிவியல் கல்விக்கழகம் ஜியார்ஜெசு வாண்டர்லிண்டன் பரிசை வழங்கியது. இவர்களுக்கு நியூயார்க் அறிவியல் கல்விக்கழகமும் பிலடெல்பியா பிராங்ளின் நிறுவனமும் தகவுறு விருதுகளை வழங்கியுள்ளன. மேலும்,அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு ஆய்வுப் பணிகளுக்காக இரண்டு இயற்பியல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்று, 1978 இல் ஆர்னோ பெஞ்சியாசுக்கும் இராபெர்ட்டு வில்சனுக்கும் இரண்டாவது, 2006 இல் ஜான் மத்தேருக்கும் ஜார்ஜ் சுமூட்டுக்கும் வழங்கப்பட்டன.[7] ஆல்ப்பரும் எர்மனும் (இவர் இறந்த பின்) 2001 இல் அவர்களது அண்டவியல் பணிகளைப் பற்றிய பெருவெடிப்பின் தோற்றம் எனும் நூல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளிடப்பட்டது.

இவர் 1986 இல் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] ஆல்ப்பருக்கு 2005 இல் தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. இது இவருக்கு "அணுக்கருத்தொகுப்பில் ஆற்றிய அரிய பணிகளுக்காகவும் புடவி விரிவுறும்போது விட்டுச் சென்ற அண்ட நுண்ண்லைக் கதிர்வீச்சுப் பின்னணியின் முன்கணிப்புக்காகவும், பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கான கணிதப் படிமத்தை உருவாக்கித் தந்தற்காகவும்" வழங்கப்பட்டதாக தேசிய அறிவியல் கழகம் கூறியுள்ளது. இப்பதக்கம், ஆல்ப்பர் உடல் நலிவால் பயணம் செய்ய இயலாமையால், இவரது மகன் விக்டரிடம் 2007 ஜூலை 27 இல் அமெரிக்க அரசத்தலைவர் ஜார்ஜ் புழ்சு அவர்களால் கையளிக்கப்பட்டது. ஆல்ப்பர் தொடர்ந்த உடல்நலிவால் 2007 ஆகத்து 12 இல் இறந்தார். இவர் 2007 பிப்ரவரி மாதம் கீழே விழுந்து இடுப்பு உடைந்தமையால் உடல்நலம் சீர்கெட்டுள்ளது.


பிற வாழ்க்கைப்பணிகள்[தொகு]

ஆல்ப்பர்1955 இல் பொதுமின்குழும ஆராய்ச்சி, புத்துருவாக்க்க மையத்தில் ஒரு பதவியில் சேர்ந்தார். தொடக்க காலத்தில் இவரது பணியாக விண்வெளியில் இருந்து வளிமண்டலத்தில் மீள நுழையும் ஊர்திகளின் (காட்டாக, ஏவுகல மீள்நுழைவு) சிக்கல்களைப் பற்றி ஆய்வதாக அமைந்தது. மேலும், இவர் அப்போது பொது மின்னோடி ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு வந்து பணிபுரிந்த இராபெர்ட்டு எர்மனுடன் இணைந்து அண்டவியல் சிக்கல்களைப் பற்றியும்வ ஆய்ந்தார். இறுதியாக, அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சின் நிலவல் உறுதி செய்யப்பட்டது. என்றாலும் இதைப் பல வானியலாளர்களாலும் கதிர்வீச்சு வானியலாளர்களாலும் முன்னரே நோக்கியிருந்தனர்.

இவர் நியூயார்க்கில் உள்ள சுசெனக்டாடியில் இருந்த யூனியன் கல்லூரியில் இயற்பியல், வானியல் துறையின் தகவுறு ஆராய்ச்சிப் பேராசிரியராக 1987 முதல் 2004 வரை இருந்துள்ளார். அப்போது இவர் மீளவும் ஆய்விலும் கல்வி பயிற்றுவித்தலிலும் ஈடுபடலானார். இக்காலம் முழுவதுமே இவர் சம ஆய்வாளர் மீள்பார்வையிடும் ஆய்விதழ்களில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார் பொதுமக்கள் ஒலிபரப்புகளிலும் முனைப்பாக சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டும் வந்துள்ளார். ஆல்ப்பர் 1987 முதல் 2004 வரை டடுலி வான்காணக இயக்குநராகவும் விளங்கினார்.

இவருக்கு 1986 இல் ஜார்ஜ் வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் தகவுறு முன்னாள் மாணவர் சாதனை விருது வழங்கியது. இவர் குறிப்பிடத்தக்க அனைத்துக் கல்வித்தகுதிகளையும் இரவில் படித்தபோது பெற்றும், பகலில் நாவாய்த்துறை, ஜான் ஆப்கின்சு பயன்முறை இயற்பியல் ஆய்வகம் ஆகியவற்றில் பணிபுரிந்தும் வந்துள்ளார். இவர்2004 இலிருந்து யூனியன் கல்லூரியில் தகைமைப் புலவல்லுனராகவும் டடுலி வான்காணக இயக்குநராகவும் சேர்ந்தார். இவர் யூனியன் கல்லூரியில் இருந்தும் இரென்செலாவேர் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்தும் தகவுறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் 2005 இலிருந்து தன் இறப்புவரை, டடுலி வான்காணக இயக்குநராகவும் நியூயார்க், சுசெனெக்டாடி யூனியன் கல்லூரி உயர்தகைமை இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் இருந்தார்,

அறிவியல்பணிசார் கண்ணோட்டம்[தொகு]

டிசுகவரி இதழுக்கான நேர்காணலில் ஆல்ப்பர் ஜோசப் தெ அகனேசியிடம், அறிவியலில் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மாந்தரின அறிவுப் பெட்டகத்துக்குப் பங்குபற்றும் அறவுணர்வு. மற்றொன்று தம் சம ஊழியப் பங்களிப்பாளர்களுக்கு நிறைவளித்தல். இதுவே எளிய உண்மை.[12]

ஆல்ப்பர் 1980 இல் தன் மகன் விக்டருக்கு அவனது உயர்கல்வி மேற்கொள்வது, எவரையும் நிறைவுகொள்ளச் செய்வதற்காக மட்டுமே அமைதல் கூடாது. மாறாக, அவர் விக்டரிடம், " நீ அன்றாடம் செய்யும் பணிகள் இன்பமும் நிறைவும் முதலில் உனக்குத் தரவேண்டும். ஏனெனில், உன்னை யாரும் பாராட்டவோ முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டோ இருக்கமாட்டார்கள்" எனக் கூறியுள்ளார். அதுவரை, ஆல்ப்பர் அமெரிக்க மெய்யியல் கழகத்திலும் பெலிஜியம் அறிவியல் கல்விக்கழகத்திலும் பிராங்ளின் நிறுவனத்திலும் அண்டவியலில் மூன்று விருதுகள் மட்டுமே பெற்றிருந்தார். இவை அனைத்துமே இவரது 50 ஆம் அகவைக்குப் பின்னரே வாய்த்தவை (விக்டர் ஆல்ப்பருக்கான சொந்த தொடர்பாடல், ஜூலை, 7, 2011).

சொந்த வாழ்க்கையும் பார்வைகளும்[தொகு]

இவர் யூதக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், பிறகு அறியொணாவாதியாகி, தன்னை ஒரு மாந்தநேயராகக் கருதினார்.[13]

இவர் சமுதாயத் தொண்டு செயல்பாடுகளில் முனைப்பாக ஈடுபட்டார். குறிப்பாக, நியூயார்க் மாநிலச் சிறுவர் சாரணராக விளங்கினார். அல்பானி-சுசெனெக்டாடி பகுதியில், இவர் WMHT-TV எனும் தொலைக்காட்சி, WMHT-FM எனும் ஒலிபரப்பு அமைப்புகளை உருவாக்கினார். இவை மீ உயர் அலைவெண், பண்பலை ஆகிய அலைவரிசைகளில் ஒலிபரப்பை நிகழ்த்தின. இவர் சுசெனெக்டாடி பகுதியின் சீர்திருத்த அமைப்பான இராபியில் இருந்து விலகியதும், இவர்நியூயார்க் சுசெனெக்டாடி பகுதி யூதக் குடும்பங்களின் ஒற்றுமைச் சமூகத்தில் 1950 களிலும் 1960 களிலும் ஈடுபட்டார். இந்தக் குழுவில் செல்வாக்கு பெற்ற சமய ஒழுங்குமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியவரான வில்லியம் ஜே. கோல்டும் ஒருவராவார்.

அந்த யூத ஒற்றுமைக் குழுவின் தலைவராக இருந்த பிறகு, அங்கு கோல்டு விலகிய பின்னர், அதில் இவருக்கு இருந்த ஈடுபாடு குறையலானது. இவரது மகளாகிய ஆரியத் தன் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மரபான யூதரை மணந்தார். இரால்ப் ஆல்ப்பர் தன் மனைவி உலூயிசின் இறப்புச் சடங்குகளைக் கவனமாக 2004 இல் யூதமரபைப் பின்பற்றி நிறைவேற்றினார். இவர் 2007 இல் இறந்தபோது முறையாக அனைத்து யூதமரபுச் சடங்குகளையும் தன் இறப்புக்குப் பின்பும் பின்பற்றிச் செய்யும்படி தன் மகனுக்கு வேண்டுகோள் முன்னமே விடுத்துள்ளார். இவரது சமயப் பண்பாட்டுத் தழுவலைக் குறித்து 2015 வரையில் இறுதித் தகவலேதும் இனங்காணப் படவில்லை; என்றாலும், தான் ஒரு யூத அறிஞர் என்பதற்கு எதிர்ப்பேதும் தெரிவித்ததில்லை. இவர் சிறுவர் சாரண இயக்கத்தில் முனைப்பாக ஈடுபட்டு, வல்லூறு(பருந்து) சாரணர் தகைமை எய்தினார். ( இவரது விக்டர் என்ற மகனுங்கூட சாரணராக இத்தகைமையை எய்தியுள்ளார். )சாரணராகச் சூள் எடுப்பதிலும் இவர் சிக்கல் எதையும் உணரவில்லை(விக்டர் எசு. ஆல்ப்பருக்கு வந்த சொந்தக் கடிதத் தொடர்பு, பிப்ரவரி 3, 2007).

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ralph Alpher, 86, Expert in Work on the Big Bang, Dies". NY Times. 2007. http://www.nytimes.com/2007/08/18/us/18alpher.html. 
  2. esUnion-Albany/Obituaries.asp?Page=Lifestory&PersonId=92608104 Obituary in the Albany (NY) Times-Union[தொடர்பிழந்த இணைப்பு]
  3. source: Dr. Victor S. Alpher
  4. personal communication from Dr. Victor S. Alpher. Apparently Alpher himself believed that the scholarship was withdrawn due to the anti-Semitism widely prevalent in American academic institutions at the time. In the article he published in Discover magazine (see D'Agnese), Joseph D'Agnese writes But there's a catch. MIT says the scholarship is good only if Alpher attends full-time and does not work. This is the Great Depression. Alpher's immigrant father is a home builder in Washington, D.C., at a time when no one can afford to buy a house. Alpher doesn't even have train fare to Boston. How can he go to school if he can't work part-time for books and meals? The letter tells him to meet with an alumnus in Washington. He talks to the alum for hours, hoping to find a way to make this work. But the guy keeps turning the conversation back to the same subject—religion—and asks Alpher about his religious beliefs. "I told him I was Jewish," Alpher says. Soon after, a second letter comes. The scholarship is withdrawn, without explanation. "My brother had told me not to get my hopes up," Alpher says, "and he was damn right. It was a searing experience. He said it was unrealistic to think that a Jew could go anywhere back then. I don't know if you know what it was like for Jews before World War II. It was terrible." Later on, he was discouraged from majoring in Chemistry at GWU for similar reasons.
  5. பிறகு, இதற்கப்பாலான தனிமங்கள் எல்லாம் விண்மீன்களில் நிகழ்ந்த அணுக்கருத் தொகுப்புகளால் ஏற்படுதல் உணரப்படலாயிற்று.இந்தப் புதிய கோட்பாடு ஏன்சு பெத்தே(Hans Bethe)], வில்லியம் பவுலர்(William Fowler), சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  6. Gamow, G. (1948). "The Origin of Elements and the Separation of Galaxies". Phys. Rev. 74 (4): 505–6. doi:10.1103/PhysRev.74.505.2. Bibcode: 1948PhRv...74..505G. http://link.aps.org/doi/10.1103/PhysRev.74.505.2. 
    Gamow, G. (30 October 1948). "The Evolution of the Universe". Nature 162 (4122): 680–2. doi:10.1038/162680a0. பப்மெட்:18893719. Bibcode: 1948Natur.162..680G. http://www.nature.com/nature/journal/v162/n4122/abs/162680a0.html. 
    Alpher, R.A. (1948). "A Neutron-Capture Theory of the Formation and Relative Abundance of the Elements". Phys. Rev. 74 (11): 1577–89. doi:10.1103/PhysRev.74.1577. Bibcode: 1948PhRv...74.1577A. http://link.aps.org/doi/10.1103/PhysRev.74.1577.  Alpher and Herman first estimated the temperature oப the cosmic microwave background as 5° K, and two years later they re-estimated it as 28° K.
  7. 7.0 7.1 Erica Westly (October 6, 2008). "No Nobel for You: Top 10 Nobel Snubs". Scientific American.
  8. Gamow joked that "There was, however, a rumor that later, when the alpha, beta, gamma theory went temporarily on the rocks, Bethe seriously considered changing his name to Zacharias". When referring to Robert Herman he wrote: "R. C. Herman, who stubbornly refuses to change his name to Delter"
  9. Alpher, R.A.; Bethe, H.; Gamow, G. (1948). "The Origin of Chemical Elements". Phys. Rev. 73 (7): 803–4. doi:10.1103/PhysRev.73.803. Bibcode: 1948PhRv...73..803A. http://link.aps.org/doi/10.1103/PhysRev.73.803. 
  10. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  11. "Book of Members, 1780–2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 15 April 2011.
  12. D'Agnese, J. (July 1999). "The Last Big Bang Man Left Standing". Discover: 61–67. http://discovermagazine.com/1999/jul/featbigbang. 
  13. Alpher, Ralph A.. "Cosmology and Humanism". Humanism Today 3: 15–27. http://www.humanismtoday.org/vol3/alpher.pdf. பார்த்த நாள்: 2022-12-08. "This leads inevitably to my identifying philosophically as an agnostic and a humanist, and explains my temerity in sharing my views with you.". 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரால்ப்_ஆழ்சர்_ஆல்ப்பர்&oldid=3791404" இலிருந்து மீள்விக்கப்பட்டது