சூ யூக்வாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூ யூக்வாங்
周有光 Edit on Wikidata
பிறப்பு13 சனவரி 1906
Changzhou Fu
இறப்பு14 சனவரி 2017 (அகவை 111)
படித்த இடங்கள்
  • Changzhou Senior High School
  • St. John's University
  • East China Normal University
  • No.1 High School Affiliated to East China Normal University
பணிமொழியியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
சூ யூக்வாங்

சூ யூக்வாங் (Zhou Youguang 13, சனவரி 1906–14, சனவரி 2017) சீன நாட்டின் மொழியறிஞர்,  சீன மொழி வல்லுநர், பொருளியலாளர் மற்றும் வங்கியாளர் என அறியப்படுகிறார். இவர் 111 ஆண்டுகள் வாழ்ந்தவர்.[1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

சீனாவில்  மக்களிடையியே  கல்வி அறிவைப் பரவலாக்கவும் சீன மொழியைக் கற்பதற்கு எளிமையாக்கவும் சீனமொழியைச் சீர்திருத்தம் செய்யவும் சூ யூக்வாங்கை சீன அரசு ஒரு குழுவின் தலைவராக அமர்த்தியது.

மாண்டரின் சீன மொழியை ரோமன் வடிவத்தில் கொண்டுவந்தார்.  பின்யின் என்ற முறை அமுலுக்கு வர காரண கர்த்தாவாக இருந்தார்.பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் ஒலிக்கும் முறையை ரோமன் எழுத்துக்களைக் கொண்டு  பயன்படுத்துதல் ஆகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளைத் தருவதற்காக சூ யூக்வாங் பயன்படுத்தினார். பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதன்று. இந்தத் திருந்திய முறையைச் சீன அரசு 1958 இல் ஏற்றுக்கொண்டது

1982 இல் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இந்தச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டது.  1986 இல் ஐக்கிய நாட்டு சபையும் ஏற்றுக் கொண்டது.

சூ யூக்வாங் பத்து நூல்கள் அளவுக்கு எழுதினார். அவற்றில் சில சீன அரசினால் தடை செய்யப்பட்டது.

புத்தகங்கள்[தொகு]

சூ யூக்வாங் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார், அவற்றில் சில சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு சில புத்தங்கள் அவருடைய நூறாவது வயதிற்கு பிறகு 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ_யூக்வாங்&oldid=3859789" இலிருந்து மீள்விக்கப்பட்டது