மெனசெம் பெகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெனசெம் பெகின்

மெனசெம் பெகின் (Menachem Begin 16 ஆகத்து 1913–9 மார்ச்சு 1992)  இசுரேலிய நாட்டின்  அரசியல்வாதி மற்றும் இசுரேலின் ஆறாவது தலைமை அமைச்சர் ஆவார். இவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். [1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

போலந்தில் பிறந்த மென்செம் பெகின் வார்சா பல்கலைக்கழகத்தில் பயின்றார். மென்செம் பெகின் தொடக்க காலத்திலிருந்து சியோனிசம் என்ற கொள்கையில் கருத்து ஊன்றியவராக இருந்தார். லிக்குட் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

எனவே பாலசுத்தீனத்தில் யூதர்களின் அரசு நிறுவப் போராடிய தீவிர வாத இயக்கியமான சியோனிஸ்ட் அமைப்பில் சேர்ந்தார். பிரிட்டிசு அதிகாரத்துக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் அரபு ஊடுருவல்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது 1977 இல் தேர்தலில் மெனசெம் பெகின் வெற்றி பெற்று இசுரேலின் தலைமை அமைச்சர் ஆனார். இதனால் 30 ஆண்டு கால தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

எகிப்துடன் போரைத் தவிர்த்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக அமைதிக்கான நோபல் பரிசு 1978 ஆம் ஆண்டில் இவருக்கும் அன்வர் சதாத்துக்கும் வழங்கப்பட்டது. 1979 இல் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.[2]

1981 இல் ஈராக் அரசு அணு ஆயுதங்கள் செய்த காரணத்தால் ஈராக்கின் ஓசிராக் அணு உலையை குண்டு போட்டுத் தகர்க்க உத்தரவிட்டார். இதனை ஒப்பேரா நடவடிக்கை என அழைத்தனர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனசெம்_பெகின்&oldid=3170409" இலிருந்து மீள்விக்கப்பட்டது