குல்பர்கா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்பர்கா கோட்டை
گلبرگہ قلعہ
பகுதி: குல்பர்கா
குல்பர்கா, கர்நாடகா, இந்தியா
குல்பர்கா கோட்டை
குல்பர்கா கோட்டை is located in கருநாடகம்
குல்பர்கா கோட்டை
குல்பர்கா கோட்டை
ஆள்கூறுகள் (17°20′26″N 76°49′52″E / 17.3405°N 76.8311°E / 17.3405; 76.8311)[2]
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அனுமதி
அனுமதி உண்டு
நிலைமை இடிபாடுகள்
இட வரலாறு
கட்டிய காலம் 1327
கட்டியவர் பாமினி சுல்தானகம் ஆட்சியில் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா கட்டினார்.
கட்டிடப்
பொருள்
கிரானைட்

குல்பர்கா கோட்டை (Gulbarga Fort) இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டத்தில் குல்பர்கா நகரில் உள்ள கோட்டை ஆகும். இக்கோட்டை பாமினி சுல்தானகத்தை தோற்றுவித்த அலாவுதின் பாமன் சா ஆட்சியில் கி.பி.1347 இல் கட்டப்பட்டது.[1][2][3]

வரலாறு[தொகு]

டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டை அலாவுதின் பாமன் சா வால் கட்டப்பட்டது.

ஜும்ஆ பள்ளிவாசல்[தொகு]

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா
ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா

முதலாம் முகம்மது ஷா (1358-75) மன்னரால் கி.பி.1347 இல் இதே வளாகத்தில் ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா கட்டப்பட்டது. ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா மினார் இல்லாமல் கட்டப்பட்டது.இப்பள்ளிவாசல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே பெரிய குவிமாடம் கொண்டு கட்டப்பட்டது.இது எசுப்பானியா நாட்டின் மூரிஸ் வடிவமைப்பில் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.[4] எசுப்பானியா நாட்டின் கோர்டோபா பள்ளிவாசல் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[5] [6][7]

புவியியல்[தொகு]

இக்கோட்டை கர்நாடகாவின் வடகிழக்கு பகுதியில் பீடபூமி நிலத்தில் அமைந்துள்ளது.பீமா ஆறு கோட்டைக்கு அருகில் பாய்கிறது இங்கு கரிசல் மண் பெரும்பான்மையாக உள்ளது.[8][9]

இங்கு சராசரி மழையளவு 777 மி.மீ. ஆகும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 45 °C (113 °F), மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 5 °C (41 °F).[3][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gulbarga". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.
  2. "Gulbarga Fort". பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.
  3. 3.0 3.1 "Gulbarga". Karnataka Online. Archived from the original on 2009-11-13. பார்க்கப்பட்ட நாள் 2009-11-04.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
  5. [1]
  6. Cumming, Sir John (2006). Revealing India's Past. Read Books. பக். 424. ISBN 9781406704082. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4067-0408-3. https://books.google.com/books?id=ygg3vZvUoDIC&pg=PA258&lpg=PA258&dq=Gulbarga+Fort&source=bl&ots=UA-7lBAee8&sig=ZMi9Rso5ZOW1M9RyTJNGJ9ElTuw&hl=en&ei=y-fySoXsGMqX8AbXudjYAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBAQ6AEwBDgU#v=onepage&q=Gulbarga%20Fort&f=false. பார்த்த நாள்: 2009-11-08. 
  7. Sathyan, B. N. Sri (1965). Karnataka State Gazetteer: Gulbarga. The Director of Print., Stationery and Publications at the Govt. Press, Government of Karnataka. பக். 218 and 462. https://books.google.com/books?id=uZkBAAAAMAAJ&q=Gulbarga+Fort&dq=Gulbarga+Fort. பார்த்த நாள்: 2009-11-10. 
  8. 8.0 8.1 "Gulbarga". History (link page). National Informatics Centre, Gulbarga. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
  9. 9.0 9.1 "Heritage Areas". National Informatics centre, Karnataka. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பர்கா_கோட்டை&oldid=3550752" இலிருந்து மீள்விக்கப்பட்டது