ஐலண்டோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐலண்ட்டோரா
உருவாக்குனர்Islandora Foundation
அண்மை வெளியீடுIslandora: 7.x-1.8
இயக்கு முறைமைபல இயக்குதளம்
மென்பொருள் வகைமைஎண்ணிம நூலகம்
உரிமம்GPL
இணையத்தளம்islandora.ca

ஐலண்ட்டோரா (Islandora) பல்லூடக எண்ணிம வளங்களை பாதுகாக்க, மேலாண்மை செய்ய, அணுக்கப்படுத்த பயன்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் தளம் ஆகும். இதனை கனடா நாட்டின் 'பிரின்சு எட்வர்டு ஐலேண்டுப் பல்கலைக் கழகத்தார்' வடிவமைத்தனர். தொடக்கத்தில் இதனை மூன்று நபர்களே பங்களித்தனர். பிறகு 10க்கும் மேற்பட்டோர் இணைந்து பங்களித்தனர். [1] இதன் உரிமம், குனூ பொதுமக்கள் உரிமம் என்ற கட்டற்ற உரிமம் ஆகும். இது ஃபெடோரா, டுரூப்பல், சோலர் (Apache Solr) உட்பட்ட பல்வேறு கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தி அல்லது அவற்றோடு சேர்ந்து இயங்குகிறது. இந்தத் தளத்தை நூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள் என பலர்,பயன்படுத்துகின்றன. இந்த மென்பொருள், பல நிறுவனங்களால் கூட்டாக கிட்கப்பில் உருவாக்கப்பட்டு, கட்டற்ற மென்பொருளாக பகிரப் படுகின்றது. இம்மென்பொருளை, 2013 ஆம் ஆண்டில், 14 நிறுவனங்களுடன் இணைந்து, 60 அமைப்புகளில், பதிவு செய்யப்பட்ட நடைமுறை ஆக்கினர். [2]. நூலக நிறுவனம் பரணிடப்பட்டது 2017-01-20 at the வந்தவழி இயந்திரம் தனது கட்டக அமைப்பில், இதனைப் பயன்படுத்துகிறது

சிறப்பியல்புகள்[தொகு]

  • செயல் சார் கூறுகள் (Functional Features)
    • பல்லூடாக ஆதரவு (Multimedia Support)
    • எளிய தேடல் (Simple/Text Search), வினவுத் தேடல் (Query Search)
    • உலாவுதல் (Browsing), முகப்பு உலாவு (Faceted Browsing)
    • எளிய பயனர் இடைமுகம், பணியோட்டம் (Simple User Interface and Workflow)
    • சேகரங்கள் - ஒரு உறுப்பு பல சேகரங்கள் (Collections - one to many mapping)
    • பாதுகாப்புக் கூறுகள் (Preservation Features): சரிபார் தொகை (Checksum), நுட்ப மீதரவு (Technical Metadata), கண்காணிப்பு (Audit)
    • திறந்த ஆவணக தகவல் முறைமை ஆதரவு (OAIS Support)
    • தொகுப்பு உள்ளீடு (Batch Processing)
    • தரவேற்றம், இறக்கம் (Export & Import)
    • நீட்டப்படக் கூடியது (Extensible) - பல கூறகங்கள் உள்ளன
    • விரிவாக்கத்தக்கது (Scalable) - பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன
  • செயல் சாராக் கூறுகள் (Non Functional Features)
    • கட்டற்ற மென்பொருள்
    • மென்பொருள் சார் சமூகத்தின் ஆலோசனைப் பெற இயலும்.
    • தொடர் விருத்தி, வளர்ச்சி
    • ஒப்பீட்டளவில் எளிதாக நிறுவக் கூடியது ; பராமரிக்கக் கூடியது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandora's Open Source Ecosystem and Digital Preservation: An Interview with Mark Leggott | The Signal: Digital Preservation". blogs.loc.gov. 2013-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  2. Castagné, Michel. "Institutional repository software comparison: DSpace, EPrints, Digital Commons, Islandora and Hydra". open.library.ubc.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலண்டோரா&oldid=3593995" இலிருந்து மீள்விக்கப்பட்டது