பம்பங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பங்கா
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய லூசோன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

பம்பங்கா (Pampanga) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் சன் பெர்னான்டோ ஆகும். இது 1571 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2]

இம்மாகாணத்தில் 505 கிராமங்களும், 19 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் லிலியா ஜி. பினெடா (Lilia G. Pineda) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,002.2 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக பம்பங்கா மாகாணத்தின் சனத்தொகை 2,198,110 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 61ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 9ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 78% கம்மன்பங்கன் இன மக்கள் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 1,100 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 05ஆம் மாகாணம் ஆகும்.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Pampanga
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.5
(86.9)
31.5
(88.7)
33.1
(91.6)
34.5
(94.1)
34.0
(93.2)
32.6
(90.7)
32.0
(89.6)
31.2
(88.2)
31.4
(88.5)
31.6
(88.9)
31.4
(88.5)
30.5
(86.9)
32.03
(89.65)
தாழ் சராசரி °C (°F) 21.6
(70.9)
21.8
(71.2)
22.9
(73.2)
24.1
(75.4)
25.0
(77)
25.0
(77)
24.6
(76.3)
24.8
(76.6)
24.3
(75.7)
24.0
(75.2)
23.5
(74.3)
22.3
(72.1)
23.66
(74.59)
சராசரி மழை நாட்கள் 5 3 4 5 13 20 22 22 22 17 15 8 156
ஆதாரம்: Storm247 [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 19 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Weather forecast for Pampanga, Philippines". Storm247.com. StormGeo AS, Nordre Nøstekaien 1, N-5011 Bergen, Norway: StormGeo AS. Archived from the original on 28 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.{{cite web}}: CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பங்கா&oldid=3561862" இலிருந்து மீள்விக்கப்பட்டது