கு. ச. ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கு. ச. ஆனந்தன் ( 4 பிப்ரவரி 1934–2 நவம்பர் 1999) தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்ட அறிஞர், வழக்குரைஞர், நூலாசிரியர், மற்றும் ஆய்வாளர் ஆவார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

கோயம்புத்தூர் மாவட்டம் தெலுங்குபாளையம்  என்ற சிற்றுரில் பிறந்தார். தந்தையார் குப்பு. தாயார் அலமேலு அம்மாள். ஈரோடு மாவட்டம்  புன்செய்ப்புளியம்பட்டியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் சத்தியமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் படித்து கோவை அரசு கல்லூரியில்  வணிகவியல் படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து பி.எல். பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

தொடக்கத்தில் கோயம்புத்தூரிலும் பின்னர் கோபிச்செட்டிப்பாளையத்திலும் வழக்குரைஞராக உரிமையியல் மற்றும் குற்றவியல் துறைகளில் பணி புரிந்தார். அரசமைப்பு ஒப்பீட்டாய்வு தொடர்பான நூல்கள் எழுதினார். திருக்குறள் ஆய்வு இந்திய ஆட்சி மொழி சிக்கல்கள் தமிழ் நாட்டின் உரிமைகள் தேசிய இனச் சிக்கல் ஆகியன குறித்து நூல்கள்  எழுதினார். ஆராய்ச்சிக் கட்டுரைகளும், பல்கலைக் கழக ஆய்வேடுகளும், மலர்களில் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதினார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

  • மலர்க மாநில சுயாட்சி
  • திருக்குறளின் உண்மைப் பொருள்
  • இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்
  • மாநில சுயாட்சியும் இந்தியப் பொருளாதாரமும்
  • திருக்குறளின் திறவுகோல்
  • வடிவிழந்த வள்ளுவம்
  • வழிபாட்டில் வல்லாண்மை
  • இந்திச் சிக்கலும் இறுதித் தீர்வும்
  • குறளிய அறம்
  • இந்தி...யா? இந்தியாவா?
  • ஓங்குக இந்திய ஒருமைப்பாடு (மாநிலத் தன்னட்சி-வரலாற்றுக் கட்டாயம்)
  • திருக்குறள் தரும் பொருளியல் கோட்பாடுகள்
  • வள்ளுவரின் மெய்யியல் (நூல்)
  • குறளாய்வின் நுழைவாயில்
  • மலரினும் மெல்லிது காமம்
  • வளரும் வள்ளுவம்
  • நினைவுத்தேடலில் சில நித்திலங்கள்
  • திருக்குறள்-புதிய தொகுபொருள் தெளிவுரை
  • குறளியச் சிந்தனைகள்-பகுதி-1
  • குறளியச் சிந்தனைகள்-பகுதி-2
  • திருவள்ளுவப் பூங்கா
  • தமிழ் வழிபாடு தமிழர் பிறப்புரிமை
  • திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்து சமயம்
  • ஆவிநேயம்
  • Hindi Problem and Ultimate Solution

விருதுகளும் பரிசுகளும்[தொகு]

  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (1990)
  • திருச்சித் திருக்குறள் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் அளித்த குறள் ஞாயிறு (1995)பட்டம்.
  • புதுச்சேரி திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த இலக்கிய முனைவர்-அரசியல் கலை ஆய்வாளர் பட்டம்.
  • தமிழக அரசின் திருக்குறள் நெறி பரப்பு மையம் வழங்கிய திருக்குறள் நெறித் தோன்றல் (1985)
  • மலர்க மாநில சுயாட்சி என்னும் நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு (1982)
  • திருக்குறளின் உண்மைப் பொருள் என்னும் நூலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் அளித்த முதல் பரிசு (1983)
  • இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும் என்னும் நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு (1998)

சான்றாவணம்[தொகு]

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது 1990-குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ச._ஆனந்தன்&oldid=3899029" இலிருந்து மீள்விக்கப்பட்டது