கிராப்சோ கார்பாக்சில்நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராப்சோ கார்பாக்சில்நீக்கம் ( Krapcho decarboxylation) என்பது எசுத்தர்களும் ஆலைடு எதிர்மின் அயனிகளும் ஈடுபடும் வேதிவினையாகும். எசுத்தர்களின் பீட்டா நிலையில் கண்டிப்பாக β-கீட்டோயெசுத்தர்கள், மெலோனிக் எசுத்தர்கள், α-சயனோயெசுத்தர்கள்,அல்லது α-சல்போனைல் எசுத்தர்கள் போன்ற ஒர் எலக்ட்ரான் வெளியீர்க்கும் தொகுதி இருக்க வேண்டும். மெத்தில் எசுத்தர்களில் இது நன்றாக வினைபுரிகிறது. உடன் விளைபொருள்களான குளோரோமெத்தேனும் கார்பனீராக்சைடும் வாயுக்களாக இழக்கப்படுகின்றன என்பதால் ஒட்டுமொத்த வினையும் என்ட்ரோபியால் இயக்கப்படுகிறது. மெலோனிக் எசுத்தர்களை நீராற்பகுக்கவும், கார்பாக்சில் நீக்கவும் இம்முறை ஒரு பயனுள்ள செயற்கைச் செயல்முறையாக பயனாகிறது. ஏனெனில் எசுதர் தொகுதிகளின் ஒன்றை மட்டும் இது பிளக்கிறது. மாற்று வழிமுறை (உதாரணமாக கார நீராற்பகுப்பு) இரண்டு எசுத்தர் தொகுதிகளையும் அழிக்கிறது. அடுத்துவரும் வினை வழக்கமாக ஆல்க்கைலேற்ற எசுத்தரை மீண்டும் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது [1][2][3][4]

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Flynn, D (1992). "Use of atom-transfer radical cyclizations as an efficient entry into a new "serotonergic" azanoradamantane". Tetrahedron Letters 33 (48): 7283. doi:10.1016/S0040-4039(00)60166-1. 
  2. Krapcho, A. Paul; Weimaster, J. F.; Eldridge, J. M.; Jahngen, E. G. E.; Lovey, A. J.; Stephens, W. P. (1978). "Synthetic applications and mechanism studies of the decarbalkoxylations of geminal diesters and related systems effected in dimethyl sulfoxide by water and/or by water with added salts". The Journal of Organic Chemistry 43: 138. doi:10.1021/jo00395a032. 
  3. Krapcho, A (1974). "Decarbalkoxylations of geminal diesters and β-keto esters in wet dimethyl sulfoxide. Effect of added sodium chloride on the decarbalkoxylation rates of mono- and di-substituted Malonate esters". Tetrahedron Letters 15 (13): 1091. doi:10.1016/S0040-4039(01)82414-X. 
  4. Krapcho, A (1967). "The decarbethoxylation of geminal dicarbethoxy compounds". Tetrahedron Letters 8 (31): 215. doi:10.1016/S0040-4039(00)90519-7.