சிராஹா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°39′0″N 86°12′0″E / 26.65000°N 86.20000°E / 26.65000; 86.20000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் சிராஹா மாவட்டத்தின் அமைவிடம்

சிராஹா மாவட்டம் ( Siraha District) (நேபாளி: सिराहा जिल्लाகேட்க), தெற்காசியாவில் நேபாள நாட்டின், கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிராஹா நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.

இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். சாகர்மாதா மண்டலத்தில் அமைந்த மாவட்டங்களுள் ஒன்றான இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,188 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 6,37,328 ஆகும்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

சிராஹா மாவட்டம் தராய் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கும் கீழிலிருந்து 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் பகுதிகள் என இரண்டு காலநிலைகளில் காணப்படுகிறது. [1]

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

சிராஹா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

சிராஹா மாவட்டம் 100 கிராம வளர்ச்சி மன்றங்களையும், ஆறு நகராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராஹா_மாவட்டம்&oldid=3099654" இலிருந்து மீள்விக்கப்பட்டது