துமாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துமாரியா
Dumaria

அமீர்கான்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மண்டலம்மகத் கோட்டம்
கோட்டம்மகத் கோட்டம்
மாவட்டம்கயா
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்824206
இணையதளம்www.gaya.bih.nic.in

துமாரியா (Dumaria) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்திலுள்ள ஒரு வட்டாரம் ஆகும். மகத் கோட்டத்தில் இவட்டாரம் உள்ளது[1][2]. மாவட்டத் தலைநகரம் கயாவிலிருந்து 83 கிலோமீட்டர் மேற்கிலும், மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவிலிருந்து வடக்கில் 175 கிலோமீட்டர் தொலைவிலும் துமாரியா வட்டாரம் அமைந்துள்ளது. மேற்கில் அரிகர்கஞ்ச் வட்டாரம், கிழக்கில் இமாம்கஞ்ச் வட்டாரம், தெற்கில் சட்டார்பூர் வட்டாரம், வடக்கில் தியோ வட்டாரம் முதலிய வட்டாரங்கள் துமாரியாவிற்கு எல்லகளாக உள்ளன. மேலும் துமாரியா நகருக்கு அருகில் அவுரங்காபாத் நகரம், அசைனாபாத் நகரம், சேர்காட்டி நகரம், ராபிகஞ்ச் நகரம் போன்ற நகரங்கள் சூழ்ந்துள்ளன. இக்கோட்டத்தில் 11 பஞ்சாயத்துகளும் 100 கிராமங்களும் அடங்கியுள்ளன. லோன்சாக் மிகச்சிறிய கிராமம் என்றும், கோலுபார் மிகப்பெரிய கிராமமாகவும் கருதப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 93 மீட்டர் உயரத்தில் துமாரியா அமைந்துள்ளது. மகதி மொழி உள்ளூர் மொழியாகப் பேசப்படுகிறது. இந்தி, உருது, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் இங்குள்ளவர்கள் பேசினர். துமாரியா கோட்டத்தில் மொத்தமாக 15531 குடும்பங்களைச் சேர்ந்த 100411 நபர்கள் வசித்தனர். இந்நபர்களில் 51326 நபர்கள் ஆண்கள் மற்றும் 49085 நபர்கள் பெண்களாவர்[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துமாரியா&oldid=3216872" இலிருந்து மீள்விக்கப்பட்டது