மகிழி காத்தாயி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிழி காத்தாயி அம்மன் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி சாலையில் கருங்கண்ணிக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ளது. கிராமத்துக் கோயிலாக விளங்குகின்ற ஏழு காத்தாயி அம்மன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவராக காத்தாயி அம்மன் வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கரத்தில் குழந்தையை அணைத்தபடியும் அமர்ந்த கோலத்தில் உள்ளார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

இக்கோயிலில் காவல் தெய்வங்களாக சப்தமுனீசுவரர் உள்ளனர். வாழ்முனி, லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளின் உருவாகவே கருதப்படுகின்றனர். இக்கோயிலில் பேச்சியம்மன், காத்தவராயன், மதுரை வீரன் சன்னதிகளும் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014