நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்

ஆள்கூறுகள்: 10°45′40″N 79°50′34″E / 10.761065°N 79.842895°E / 10.761065; 79.842895
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் is located in தமிழ் நாடு
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகப்பட்டினம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°45′40″N 79°50′34″E / 10.761065°N 79.842895°E / 10.761065; 79.842895
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம் மாவட்டம்
அமைவிடம்:நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி:நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:64 m (210 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:செடில் உற்சவம்,
மார்கழி திருவாதிரை,
விநாயகர் சதுர்த்தி,
கந்த சஷ்டி,
ஆடி செவ்வாய்,
ஆடி வெள்ளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ளது.[2]

மூலவர்[தொகு]

அழகிய இராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டு அமைந்துள்ளார். சிறந்த பிரார்த்தனைத் தலம் என்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது.[2]

செடில் உற்சவம்[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் இங்கு நடைபெறுகின்ற செடில் உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] அவ்விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுகின்றவர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறியபின்னர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்கவைக்கின்றனர். ஏற்றம் போல அமைந்துள்ள செடிலில் குழந்தைகளைத் தாங்கிய படியானது பூசாரியால் சக்கரம் போல சுழற்றப்படுவதே நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.[2]

பராமரிப்பு[தொகு]

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
  2. 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  3. பா.கேசவன் (2023-05-10). "நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம் விநோத வழிபாடு!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
  4. "Arulmigu Neallukkadai Mariyamman Temple, Nagapattinam Town, Nagappattinam - 611001, Nagapattinam District [TM014723].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.

வெளி இணைப்புகள்[தொகு]