சமர், பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமர்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கிழக்கு விசயாசு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

சமர் (Samar) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கட்பலோகன் ஆகும். இம்மாகாணம் 1768 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் சாரீ ஆன் டி, டன் (Sharee Ann T. Tan) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 6,048.03 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சமர் மாகாணத்தின் சனத்தொகை 780,481 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 10ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 34ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 951 கிராமங்களும், 24 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. கடலிலிருந்து இமாகாணத்தின் அதிகூடிய நில உயரம் 850 மீற்றர்கள் ஆகும். இம்மாகாணம் பேர்டினன்ட் மகலன் தரிசித்த மாகாணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்,_பிலிப்பீன்சு&oldid=3929591" இலிருந்து மீள்விக்கப்பட்டது