அமானட்டு நதி

ஆள்கூறுகள்: 24°07′30″N 84°03′43″E / 24.12500°N 84.06194°E / 24.12500; 84.06194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமானட்டு நதி
Amanat River
River
நாடு இந்தியா
மாநிலம் சார்க்கண்ட்டு
அடையாளச்
சின்னம்
இலவாலாங்கு வனவிலங்குப் பூங்கா

அமானட்டு நதி (Amanat River) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள பலாமூ மற்றும் சத்ரா [1]மாவட்டங்களின் வழியாகப் பாய்கின்ற ஒரு நதியாகும்.

அசாரிபாக் பீடபூமியில் தோற்றம் பெறும் இந்நதி, சத்ரா மாவட்டத்தின் சிமாரியா காவல்நிலையப் பகுதியில் இருக்கும் இலவாலாங்கு வனவிலங்குப் பூங்காவிற்கு தெற்கு எல்லையாக உருவாகியுள்ளது. அதன் பின்னர், இந்நதி கிட்டத்தட்ட பலாமு மாவட்டத்தின் மேற்கு பகுதி முழுவதும் பாய்ந்து டால்டன்கஞ்ச் நகரத்திற்கு வடக்கில் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வட கோயல் நதியுடன் இணைகிறது. பலாமூ மாவட்டத்திற்குக் கிழக்கில் ஒரு முக்கிய வடிகால் கால்வாயாகத் திகழும் இந்நதி செழிப்பான சாகுபடியைத் தருகின்ற பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது.

துணைநதிகள்[தொகு]

இயின்யோய், மைலா மற்றும் பிரி முதலியன இந்நதிக்கு துணைநதிகளாக இருக்கின்றன[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Management Plan of Lawalong Wildlife Sanctuary" (PDF). The protected Area – the Existing Situation. Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  2. "Gazetteer of Palamu District". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமானட்டு_நதி&oldid=3541276" இலிருந்து மீள்விக்கப்பட்டது