பர்தியா மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°49′0″N 80°29′0″E / 28.81667°N 80.48333°E / 28.81667; 80.48333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் பர்தியா மாவட்டத்தின் அமைவிடம்

பர்தியா மாவட்டம் (Bardiya District) (நேபாளி: बर्दिया जिल्लाListen), மத்திய மேற்கு நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மாநில எண் 5-இல் அமைந்த 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் குலரியா நகரம் ஆகும்.

பர்தியா மாவட்டத்தின் பரப்பளவு 2,025 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,26,576 ஆகும். [1]

அமைவிடம்[தொகு]

மத்திய மேற்கு நேபாளத்தில் மாநில எண் 5-இல், 2025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த பர்தியா மாவட்டம், பாங்கே மாவட்டத்தின் மேற்கிலும், நேபாள மாநில எண் 6-இல் உள்ள சுர்கேத் மாவட்டத்தின் தெற்கிலும், நேபாள மாநில எண் 7-இல் உள்ள கைலாலி மாவட்டத்தின் கிழக்கிலும் அமைந்துள்ளது. பர்தியா மாவட்டத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பகுதியின் லக்கிம்பூர் கேரி மாவட்டம் மற்றும் பகராயிச் மாவட்டங்கள் உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

பர்தியா மாவட்டத்தின் பெரும் பகுதிகள் தெராய் சமவெளியில் உள்ளதால், வேளாண்மை மற்றும் காடு வளர்ப்பு நன்கு உள்ளது.

பர்தியா மாவட்டத்தின் வடக்கில், சிவாலிக் மலைகளில் அமைந்த பர்தியா தேசியப் பூங்கா 968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பர்தியா மாவட்டத்தில் கர்னாலி ஆறு பாய்கிறது. இவ்வாற்றில் காணப்படும் அரிய மீன் டால்பின்கள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2]

தட்ப வெப்பம் [3] உயரம் பரப்பு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 71.4%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 22.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 2.7%

பர்தியாவின் வடக்கில் உள்ள காடுகளில் தாரு இன பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களது முக்கியத் தொழில் ஆகும்.

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள்[தொகு]

பர்தியா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளின் வரைபடம்

பர்தியா மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், முப்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து April 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. "River dolphins under threat in Nepal". WWF. 26 May 2006. http://www.wwfnepal.org/?70540/river-dolphins-under-threat-in-nepal. பார்த்த நாள்: 26 May 2006. 
  3. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013


"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தியா_மாவட்டம்&oldid=3099722" இலிருந்து மீள்விக்கப்பட்டது