குமோன் மஸ்தீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமாவுன் மஸ்தீஃப் ( Kumaon Mastiff (குமவுனி: सिप्रो कुकुर), இது இந்திய மஸ்தீஃப் மற்றும் புல்லி என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.  இது ஒரு அரிய காவல் நாய் இனமாகும். இது இந்தியாவின் உத்ரகண்ட் மாநிலத்தில் காணப்படுகிறது. இது முதன்மையான காவல் நாயாக மற்றும் கால்நடை பாதுகால் நாயாக குமாவுன் மலைப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்தது. இது தற்போது அவை தோற்றிய பகுதியிலே கூட அரிதாகிவிட்டது.[1]

பிறப்பிடம்[தொகு]

இந்த நாய்கள் குமாவுன் வட்டாதர்தின் மலைப்பகுதிகளில் தோன்றியது.

தோற்றம்[தொகு]

குமாவுன் மஸ்தீஃப் நாய்கள் மிக ஒல்லியான பெரிய நாய்களாகும். இவை  பெரிய சக்தி வாய்ந்த தலை மற்றும்  வலுவான கழுத்து கொண்டவை. இந்த நாய்களின் சராசரி உயரம் 28 அங்குலம் ஆகும்.[2]

இவற்றின் தோற்றம் ஓல்ட் கிரேட் டேன்ஸ் நாயை ஒத்ததாக இருக்கும்.

குணம்[தொகு]

இவை ஆக்கிரமிப்பு குணமுள்ள நாய்கள் மற்றும் பயிற்சி தேவைப்படக்கூடியவை. இந்த நாய்கள் பெரும் பாதுகாவல் திறன் கொண்டவை அந்நியர்கள் ஊடுருவாமல் பாதுகாக்கும் உள்ளுணர்வு கொண்டவை. [3]

அருகிவரும் இனம்[தொகு]

இந்த இன நாய்கள் ஏறக்குறைய  150-200 வரையிலானவை மட்டுமே இந்தியாவின் [4]  உத்ரகண்ட் மாநிலத்தின் குமாவுன் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்த நாய்கள் கனிசமான அளவு ஐரோபாவில் இருக்கலாம் என கருதப்படுகிறது,[1] குறிப்பாக இத்தாலி மற்றும் பின்லாந்துd[2] ஆகிய பகுதிகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த இனத்தை விரும்பியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kumaon Mastiff-On the Verge of Extinction". mastiffdogsite.com. Archived from the original on மார்ச் 21, 2013. பார்க்கப்பட்ட நாள் March 31, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Cypor Kukur". பார்க்கப்பட்ட நாள் March 31, 2013.
  3. "Kumaon Mastiff Dog Breed Information". petsworld.in. பார்க்கப்பட்ட நாள் July 8, 2015.
  4. "Endangered Breeds". BSL Information. பார்க்கப்பட்ட நாள் March 31, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமோன்_மஸ்தீஃப்&oldid=3929044" இலிருந்து மீள்விக்கப்பட்டது