திருமயிலாடி சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமயிலாடி சுந்தரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில், சீர்காழிக்கு வடக்கே 5 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சுந்தரேசுவரர் என்றழைக்கப்படுகிறர். இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இங்குள்ள இறைவி பெரியநாயகி என்றும் பிரகதாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். கண்வ முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.[1]

வரலாறு[தொகு]

உமையம்மை மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதாகக் கூறுவர். 60 அடி உயர ராஜகோபுரமும், ஒரு திருச்சற்றும் கொண்டு கோயில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]