வினைல் ஆலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினைல் ஆலைடுகளின் பொதுவமைப்பு: இங்கு X- என்பது ஆலசனையும், R- என்பது பக்க சங்கிலி தொகுதியையும் குறிக்கின்றன.

வினைல் ஆலைடு (Vinyl halide) என்பது ஆல்க்கீன் ஏதாவதொன்றில் குறைந்தபட்சம் ஒரு ஆலைடு பதிலீடு பிணைப்பு நேரடியாக ஆல்க்கீன் கார்பன் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் சேர்மத்தைக் குறிக்கிறது. வினைல் குளோரைடு இத்தகையதொரு சேர்மமாகும்.

எண்ணற்ற வினைகளில் பயன்படுத்தப்படுவதால் வினைல் ஆலைடுகள் மிகவும் பயனுள்ள செயற்கை இடைநிலைகளாக உள்ளன. வினைல் கிரிக்னார்டு வினைப்பொருளாக மாற்றும் வினைகளில் இவை பயன்படுகின்றன. விளைபொருளில் இருந்து இவற்றை நீக்கும்போது தொடர்புடைய ஆல்க்கைனைக் கொடுக்கின்றன. சுசுக்கி மியாவுரா பிணைப்புவினை, சிடில்லெ பிணைப்பு வினை , எக் பிணைப்பு வினை இத்யாதி உள்ளிட்ட குறுக்குப் பினைப்பு வினைகளில் வினைல் ஆலைடுகள் மிகமுக்கியப் பங்கு வகிக்கின்றன[1].

இதன் விளைவாக வினைல் ஆலைடுகளை உருவாக்கும் வினைகள் ஏராளமாக உள்ளன. வினைல் கரிமவுலோக இனங்கள் ஆலசன்களுடன் ஈடுபடும் வினை, டகாய் மற்றும் விட்டிக் ஒலிஃபீனேற்ற வினை உள்ளிட்ட வினைகள் இதற்கு சில உதாரணங்களாகும். ஒலிஃபீன் மெட்டா தெசிசு வினையில் வினைல் ஆலைடு தயாரிக்கும் வினையும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

சில வினைல் ஆலைடுகள் பலபடி, இணைபலபடி போன்றவற்றை தயாரிக்கவும் பெரிதும் உதவுகின்றன. இதாரணம்: பாலி வினைல் குளோரைடு, பாலிவினைல் புளோரைடு. பதிலீடு செய்யப்படாத வினைல் ஆலைடுகள் (R1 = R2 = R3 = H) சில நிபந்தனைகளில் தன்னிச்சையாக பலபடிகளாக மாறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Koh, Ming Joo; Nguyen, Thach T.; Zhang, Hanmo; Schrock, Richard R.; Hoveyda, Amir H.. "Direct synthesis of Z-alkenyl halides through catalytic cross-metathesis". Nature 531 (7595): 459–465. doi:10.1038/nature17396. http://www.nature.com/doifinder/10.1038/nature17396. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_ஆலைடு&oldid=2163155" இலிருந்து மீள்விக்கப்பட்டது