நைட்ரோஃபென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோஃபென்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4-டைகுளோரோ-1-(4-நைட்ரோபீனாக்சி)பென்சீன்
வேறு பெயர்கள்
நைட்ரோஃபென்;நைட்ரோபீன்; 2,4-டைகுளோரோபீனைல் 4-நைட்ரோபீனைல் ஈதர்
இனங்காட்டிகள்
1836-75-5 Y
ChemSpider 15010
InChI
  • InChI=1S/C12H7Cl2NO3/c13-8-1-6-12(11(14)7-8)18-10-4-2-9(3-5-10)15(16)17/h1-7H
    Key: XITQUSLLOSKDTB-UHFFFAOYSA-N
  • InChI=1/C12H7Cl2NO3/c13-8-1-6-12(11(14)7-8)18-10-4-2-9(3-5-10)15(16)17/h1-7H
    Key: XITQUSLLOSKDTB-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15787
SMILES
  • Clc2cc(Cl)ccc2Oc1ccc([N+]([O-])=O)cc1
பண்புகள்
C12H7Cl2NO3
வாய்ப்பாட்டு எடை 284.09 g·mol−1
தோற்றம் நிறமற்றது, படிகத்திண்மம்[1]
அடர்த்தி 1.80 கி/செ.மீ3 83 ° செ.இல்[1]
உருகுநிலை 64–71 °C (147–160 °F; 337–344 K) (technical)[1]
0.7-1.2 மி.கி/லி 22 ° செ இல்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைட்ரோஃபென் (Nitrofen) என்பது C12H7Cl2NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். களைக்கொல்லியான இச்சேர்மம் ஒரு டைபீனைல் ஈதர் வகையாக பகுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயூக்கி தொடர்பான கவலைகள் காரணமாக 1996 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியம் [2], அமெரிக்கா போன்ற நாடுகளில் நைட்ரோஃபென் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது [3]. கரிம வேளாண் உணவுகள், முட்டைகள், கரிம கோழிப்பண்னை சார் பொருட்களில் நைட்ரோஃபென்னின் இருப்பு செருமனியில் கண்டறியப்பட்டதால் 2002 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் கரிம இறைச்சி விற்பனையிலும் உடனடியாக சரிவு ஏற்பட்டது [4][5]. அனைத்துலக புற்றுநோய் ஆய்வு நிறுவனம் நைட்ரோஃபென்னை 2பி வகை புற்றுநோய் காரணி என வகைப்படுத்தியுள்ளது. நைட்ரோஃபென் சேர்மத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பது இதன் பொருளாகும் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Nitrofen, WHO/FAO Data Sheets on Pesticides, No. 84
  2. Banned pesticide in German grain பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Pesticides News No. 57, September 2002, page 22
  3. Nitrofen data sheet, INCHEM WHO/FAO report, July 1996.
  4. Nitrofen scandal causes organic meat sales to dip பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Just Food, October 2, 2002.
  5. Organic scandal halts Germany's green revolution, by John Hooper, The Guardian, June 12, 2002.
  6. "IARC Monographs - Classifications - by Group" (PDF). Archived from the original (PDF) on 2011-10-25. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோஃபென்&oldid=3561242" இலிருந்து மீள்விக்கப்பட்டது