பனித்தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனித்தூபித் திட்டம்
வணிகம்இல்லை
திட்ட வகைநீர்ப் பாதுகாப்பு
இடம்லடாக்
Ownerமாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம், லடாக் (SECMOL)
Founderசோனம் வாங்சுக்
நாடுஇந்தியா
Key peopleSசோனம் வாங்சுக்
Establishedஅக்டோபர் 2013; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2013-10)
Budgetகூட்டு நிதிநல்கை
இணையத்தளம்icestupa.org

பனித்தூபி என்பது, பனிமலை வளர்க்கும் தொழில்நுட்பம் மூலம் செயற்கைப் பனிமலைகளை உருவாக்கும் முறை ஆகும். இவ்வாறு உருவாக்கப்படும் பனித்தூபியானது, கோடைகாலத்தில் நீர், பற்றாக்குறையாகக் காணப்படும் போது, பயிர்களுக்குத் தேவையான நீரை வழங்குகின்றது. லடாக் எனும் இடத்தில் வாழ்ந்துவந்த சோனம் வாங்சுக் எனும் பொறியியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பொறிமுறையினைத் தற்போது, அரசு சாராத அமைப்பான மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம், லடாக் நடாத்தி வருகின்றது. பனித்தூபி எனும் இத்திட்டம் 2013 ஒக்டோபரில் நிறுவப்பட்டு சனவரி 2014 இல் ஆரம்பமானது. நவம்பர் 15 ம் தேதி 2016, அன்று  சோனம் வாங்சுக் ரோலக்ஸ் விருதுகள் நிறுவனத்தால் இப்பொறிமுறையை அறிமுகம் செய்ததற்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். .

பின்னணி[தொகு]

லடாக் ஓர் குளிர்ப் பாலைவனம் ஆகும். இங்கு பயிர்கள் பயிரிடப்பட்டாலும், கோடைகாலங்களில் போதியளவு பயிருக்குத்தே வையான நீர் கிடைக்காமை, பயிர் செய்யும் மக்களுக்க்கு பிரதிகூலமாக அமைந்தது. எனவே இப்பிரச்சினையைப் போகும் பொருட்டு பல பொருளியலாளர்கள், பல முயற்சிகளையும், பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர். இவ்வாறு ஒரு முறை பாதை வழியே நடந்து கொண்டிருந்தபோது சோனம் வாங்சுக் அவர்கள் பாலம் ஒன்றின் கீழ் பனி உருகாது அவ்வாறே இருப்பதை அவதானித்தார். பனித்தூபிப் பொறிமுறை அறிமுகமானதன் முதலாவது படி இதுவே ஆகும். பின்னர் தான் அவதானித்த பனி உருகாமைக்கான காரணத்தை ஆராய்ந்து கண்டறிந்த சோனம் வாங்சுக், கூம்பு வடிவில் ஓர் குவியல் இருக்குமானால் அக்குவியல் இலகுவில் உருகாமலும் இருக்கும் என்பதையும் கண்டறிந்தார். இவ்வாறாக பனி உருகும் முறையின் பின்னணியை வைத்தே பனித்தூபி முறை கண்டறியப்பட்டது. [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனித்தூபி&oldid=2923534" இலிருந்து மீள்விக்கப்பட்டது