ஜார்ஜ் பீல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் பீல்டு
பிறப்பு25 அக்டோபர் 1929 (அகவை 94)
பிராவிடென்ஸ்
படிப்புமுனைவர்
படித்த இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிவானியல் வல்லுநர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Guggenheim Fellowship, என்றி நோரிசு இரசல் விரிவுரைத்தகைமை, கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
நிறுவனங்கள்
ஆய்வு நெறியாளர்இலைமன் சுட்டிராங் சுபிட்சர்
முனைவர் பட்ட மாணவர்கள்Sean M. Carroll, Carl E. Heiles, Christopher McKee, Ira Wasserman, Telemachos Mouschovias, Péter Mészáros, Eric Glen Blackman

ஜார்ஜ் பி. பீல்டு (George B. Field) (பிறப்பு 1929 அக்தோபர் 25) உரோடுத் தீவில் பிறந்த அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார்.

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

இளம்பருவத்தில் இருந்தே பீல்டு வானியலில் ஆர்வம் கொண்டார். என்றாலும் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்க, இவர் வேதிப் பொறியியலைமசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்றார். பொறியியலில் வெறுப்பு ஏற்படவே, பின்னர் இவர் வானிய்ற்பியலைக் கற்கலானார்.பின்னர் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் முதுவல் பட்டம் படித்தார்.

பீல்டு மின்ம அலைவுகளில் பணிபுரிந்து பிறகு அண்டவியலில் ஆர்வம் கொண்டார்.[1] 1973 இல் ஆர்வார்டு சுமித்சோனியன்வானியற்பியல் மையத்தின் நிறுவன இயக்குநர் ஆனார் இம்மையம் சுமித்சோனிய வானியற்பியல் மையத்தையும் (அரசு முகமை) ஆர்வார்டுகல்லூரி வான்காணகத்தையும் (தனியார் நிறுவனம்) ஒருங்கிணைத்து தன் மேலாண்மையின் கீழ் கொணர்ந்தது. இவருக்குப் பின் இர்வின் சாப்பிரோ பொறுப்பேற்ற 1982ஆம் ஆண்டு வரை அங்கே இயக்குநராக விளங்கினார்.

1980 களின் தொடக்கத்தில், அமெரிக்க வானியல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தந்த தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைமையேற்றிருந்தார்.[2]

இவரது ஆராய்ச்சி மாணவர்களாக எறிக் ஜி, பிளாக்மன், சீன் எம். கறோல், கார்ல் ஈ. எயிலிசு, பீட்டர் மெசுசாரோசு, கிரித்தோபர் மெக்கீ, தெலிமாக்கோசு சி, மவுசுசோவியாசு, பவுல் ஆர். சாப்பிரோ ஆகியோர் விளங்கினர்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. : Interview with Dr. George Field by Dr. Richard Hirsh At Smithsonian Astrophysical Observatory, Cambridge, Massachusetts July 14, 1980. Niels Bohr Library and Archives.
  2. Book review பரணிடப்பட்டது 2010-06-24 at the வந்தவழி இயந்திரம், Astronomy from Space: Sputnik to Space Telescope, edited by James Cornell and Paul Gorenstein, April 1985, The MIT Press. ISBN 0-262-53061-9.
  3. "Recipients of the Karl Schwarzschild Medal". Archived from the original on 17 May 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பீல்டு&oldid=3213831" இலிருந்து மீள்விக்கப்பட்டது