லீலாவதி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லீலாவதி ( Līlāvatī ) என்பது இரண்டாம் பாஸ்கர‍ரால் சமஸ்கிருத‍த்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.[1] இந்த பகுதியின் பெயர் பாஸ்கர‍ரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நூலின் அடுத்தடுத்த பகுதிகள் பிஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் ஆகியவை ஆகும்.[2]

பெயர்[தொகு]

லீலாவதி புத்தகத்தகம் உருவான கதையாக கூறப்படுவது, பாஸ்கராசாரியாவுக்கு லீலாவதி என்ற மகள் இருந்ததாள் அவளுக்கு சோதிடம் பார்த்தபோது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை எனப் பாஸ்கரா கணித்தார். அதனை மற்ற சோதிட நிபுணர்களிடம் உறுதி செய்தபிறகு, எப்படியாவது மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் திருமணத்துக்குக் குறித்த முகூர்த்த நேரம் கடந்துவிட்டதால் லீலாவதிக்கு திருமணம் நிகழ்த்த முடியவில்லை.

இதனால் துயரம் அடைந்த லீலாவதியை உற்சாகப்படுத்தவே பாஸ்கரா தனது கணிதப் புதிர்கள் அடங்கிய நூலை மகள் பெயரிலேயே எழுதியதாக நம்பப்படுகிறது. இந்நிகழ்வு உண்மையிலேயே நடந்ததா அல்லது கற்பனையா எனச் சரிவரக் கூற முடியவில்லை. ஆனால் இந்த நூலில் ஆங்காங்கே லீலாவதி பெயரைப் பயன்படுத்தி அப்புதிருக்கான விடையைக் காணும்படி லீலாவதி புத்தகத்தை பாஸ்கரா எழுதியிருக்கிறார்.[3]

நூல் அமைப்பு[தொகு]

லீலாவதி 34 அத்தியாயங்களைக் கொண்டதாக, செய்யுள் வடிவில் 278 கணிதக் குறிப்புகளையும், புதிர்களையும் வழங்கியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Plofker 2009, ப. 71.
  2. Poulose 1991, ப. 79.
  3. "Pearls of Wisdom". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் September 1, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலாவதி_(நூல்)&oldid=2747850" இலிருந்து மீள்விக்கப்பட்டது