உறையூர் சுருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறையூர் சுருட்டு திருச்சி மாவட்டம் திருச்சி அருகேயுள்ள உறையூர் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்ற இடமாகும்.

செய்முறை[தொகு]

நெல்லைப்போல புகையிலையை நடவு செய்தபின் தொடர்ந்து கவனித்துவரவேண்டும். அறுவடையின்போது ஒன்றோடொன்று இணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அறுவடை செய்தபின் புகையிலையை காயவைப்பர். மூன்று நாள் கழித்து அதனைப் பார்க்கும்போது நிறம் மாறியிருக்கும். பின்னர் இவை கிடங்கில் பாதுகாக்கப்படும். அத்துடன் தேவையான அளவு பனை வெல்லத்தைக் கலந்து சுருட்டு தயாரிக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு அதனுடைய தன்மை மாறாமல் இருக்க மூன்று நாளுக்கொரு முறை இடம் மாற்றி வைக்கப்படுகிறது. சிறியது முதல் மூன்றரை அங்குலம் வரை அளவில் தயாரிக்கப்படுகிறது. [1]

ஏற்றுமதி[தொகு]

பல்வேறு நாடுகளுக்கு சுருட்டு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அவானாவில் இருந்து சுருட்டு தருவிக்கபட்டு வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அவானாவில் இருந்து வரும் கப்பல்கள் நாசிப் படைகளால் தடுக்கப்பட்டன. அதன்பிறகு உறையூர் சுருட்டுகள் சர்ச்சிலுக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சுருட்டுகள் அவருக்குப் பிடித்துப் போயின. இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளில் உறையூர் சுருட்டு பிரபலமடைந்தது.[2]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

செர்லக் ஓம்சின் துப்பறியும் புதினங்களில் குற்றவாளி குறித்த விவரிப்பில் 'ஆறடி உருவம் அகோரமும், வாயில் புகையும் திருச்சிராப்பள்ளி சுருட்டு' என்ற வரியும் இடம்பெற்றது.[2] திருச்சிராப்பள்ளி சுருட்டு என்பது உறையூர் சுருட்டைக் குறிப்பதாகும்.

ஊரால் சிறப்பு[தொகு]

இவ்வாறே மணப்பாறை முறுக்கு, காங்கேயம் காளை, திண்டுக்கல் பூட்டு போன்றவை ஊரின் பெயரால் சிறப்பினைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி புத்தாண்டு மலர் 2017, பக்.20,21
  2. 2.0 2.1 "திண்ணைப் பேச்சு 29: உறையூர் சுருட்டும் இரண்டாம் உலகப் போரும்". 2023-12-07. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறையூர்_சுருட்டு&oldid=3852079" இலிருந்து மீள்விக்கப்பட்டது