திருவிழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிழிப்பு, tacuinum sanitatis casanatensis (14ம் நூற்றாண்டு)
"A Knight's Vigil" by John Pettie

திருவிழிப்பு (Greek: pannychis,[1] παννυχίς or agrypnia[2] ἀγρυπνία),[3] என்பது சமயம் உட்பட பல நோக்கங்களுக்காக உறங்காமல் விழித்திருந்து கடைபிடிக்கும் காலத்தினைக் குறிக்கும். இக்கால அளவு இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரு விழாவின் முந்தைய நாளைக்குறிக்க பயன்படுகின்றது.

சமய விழாக்களின் திருவிழிப்பு[தொகு]

கிறித்தவ பண்டிகைகளின் முந்தைய நாளின் மாலைப்பொழுதிலிருந்து திருவிழிப்பு கடைபிடிக்கப்படுகின்றது.[4] இது யூத வழக்கப்படி ஒரு நாள் என்பது மாலைப்பொழுதில் தொடங்கி மறுநாள் மாலையில் முடிவுறும் என்னும் காலக்கணிப்பு முறையினை அடிப்படையாகக் கொண்டது. இவ்வகை சடங்குகளில் மன்றாட்டுகள், பாடல்கள், திருப்பாடல்கள், திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துகள் முதலியன வாசிக்கப்படுவதும், மறையுரையும் இருக்கும். அதனோடு அமைதியான தியானமும் கடைபிடிக்கப்படலாம்.

இவ்வகை திருவிழிப்புகளில் மிகவும் அதிகம் கடைபிடிக்கப்படுவது புனித சனி மற்றும் உயிர்ப்பு ஞாயிறுக்கு இடையே உள்ள இரவில் கடைபிடிக்கப்படும் பாஸ்கா திருவிழிப்பு ஆகும். கிறித்துமசுக்கு முந்தைய நாளிலும் திருவிழிப்பு கடைபிடிக்கப்படுகின்றது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் முழு இரவு திருவிழிப்பு என்பது திருவழிபாட்டு ஆண்டில் வரும் மிகவும் குறிக்கத்தக்க விழாக்கள் மற்றும் புனிதர்களின் விழாக்களுக்கும் கடைபிடிக்கப்படுகின்றது.

திருவிழிப்பு நாள் பொதுவாக ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் மெதடிசத் திருச்சபைகளில் விடுமுறை நாள் ஆகும்.[5]

ஒரு இறப்புக்குப்பின்பு[தொகு]

யூத சமயத்தில் ஒரு யூதர் இறந்தப்பின்பு அவரின் அடக்கச்சடங்கு துவங்கும் வரை அவரின் உடலோடு திருவிழிப்பில் காத்திருந்து பல மன்றாட்டுகள் செய்வது வழக்கம்.

கிறித்தவத்தில் குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மரபுப்படி ஒருவர் நோயுற்றிருக்கும் போதோ அல்லது அருவரின் நினைவேந்தல் நாட்களின் போதோ திருவிழிப்பில் இருப்பது வழக்கம். இது இறந்தவருக்காக மன்றாடுவதற்காகவும் அவரின் உடலை தனியே விடாதிருக்கவும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. παννυχίς. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project
  2. ἀγρυπνία. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project
  3. Cross, F. L. Cross; Livingstone, E. A., தொகுப்பாசிரியர்கள் (2005). The Oxford Dictionary of the Christian Church. Oxford University Press. http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780192802903.001.0001/acref-9780192802903-e-5101. 
  4. "Eve of a Feast". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 
  5. UMC.org பரணிடப்பட்டது 2009-10-21 at the வந்தவழி இயந்திரம்

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிழிப்பு&oldid=2161108" இலிருந்து மீள்விக்கப்பட்டது