கப்பல் அளவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கப்பல் அளவைகள் என்பன, கப்பல்களின் வடிவமைப்பு, செயற்பாடு, விதிமுறைகள் என்பன தொடர்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு அளவுகளைக் குறிக்கும். பொதுவாகக் கப்பல்கள் காவிச்செல்லவுள்ள பண்டங்களையும், பிற கடல்வழிப் போக்குவரத்துத் தேவைகளையும் கருத்தில்கொண்டு கப்பல்களின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. கப்பல்களை வகைகளாகப் பிரிப்பதற்கும் கப்பல் அளவைகள் பயன்படுகின்றன. கப்பல்கள் ஏற்றிச்செல்லக்கூடிய பொருட்களின் அளவைக்கொண்டு, அதாவது கப்பல்களின் கொள்ளளவைக்கொண்டு அவற்றை வகைப்படுத்துவது உண்டு. கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள பல்வேறு , கால்வாய்ப்பூட்டுக்கள்,நீரிணைகள் போன்றவற்றினூடாகச் செல்லக்கூடிய கப்பல்கள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கும், அவற்றின் அடிப்படையில் கப்பல்களை வகைப்படுத்துவதற்கும் கப்பல்களின் அகலம், உயரம், மிதப்புயரம் போன்ற நீள அளவைகள் பயன்படுகின்றன.

அளவைகளும் வரைவிலக்கணங்களும்[தொகு]

அகலம் (Beam ) - கப்பலின் அகலத்தின் அளவு. இதில் இரு வகைகள் உள்ளன.

ஒட்டுமொத்த அகலம் - நீர்மட்டத்தில் அளக்கப்பட்ட கப்பலின் ஒட்டுமொத்த அகலம்.
மையக் கோட்டு அகலம் - இது பலசுவர்க் கப்பல்களில் பயன்படுகிறது. கட்டுமரங்களுக்கு ஒரு பக்கச் சுவரின் மையக்கோடிலிருந்து மறு பக்கச் சுவரின் மையக்கோட்டுக்கு இடையில் தள மட்டத்தில் அளக்கப்படும் செங்குத்துத் தூரம்.

கனம் (Cube) - இது கப்பலின் சரக்குக் கொள்ளளவு ஆகும். கன அடியில் அளக்கப்படுகிறது. இரண்டு பொது வகைகள் உள்ளன.

பொதிக் கனம் - கப்பலில் சரக்குகளுக்கான இடவசதியின் அளவைக் குறிக்கிறது. இது கன அடியில் அளக்கப்படுகிறது. இது, சரக்கு கப்பலின் வடிவத்துக்குப் பொருந்திவராத வடிவங்களைக் கொண்ட, பொதிகளாக் கட்டப்பட்ட அல்லது பெட்டிகளில் அடைக்கப்பட்ட சரக்குகளுக்கு உரியது.
தானியக் கனம் - இதுவும் கன அடியில் அளக்கப்படும் சரக்குக் கொள்ளளவு அளவு ஆகும். ஆனால் இது கப்பலின் வடிவத்துக்கு ஏற்றவகையில் இடத்தை நிரப்பக்கூடிய தானியம் போன்ற சரக்குகளுக்கு உரியது.

இடப்பெயர்ச்சி - இது கப்பல்களின் நிறையை அளப்பதற்கான ஒரு அளவை. பொதுவாகப் போர்க் கப்பகள் தொடர்பிலேயே பயன்படுத்தப்படுகின்றது. இது 2,240 இறாத்தல்களைக் கொண்ட நீளத் தொன்னில், அல்லது 1,000 கிலோ கிராம் அளவுள்ள மெட்ரிக் தொன்னில் அளக்கப்படுகின்றது. இது அலகுகளும் மிகக் குறைவான வேறுபாட்டைக் கொண்டிருப்பதனால் (2,240 இறாத்தல் = 1,016 கிலோகிராமும் 1,000 கிலோகிராம் = 2,205 இறாத்தலும் ஆகும்), பொதுவாக இவற்றை வேறுபடுத்துவது இல்லை.

இடப்பெயர்ச்சி, இலகு - சரக்கு, எரிபொருள், களஞ்சியப்படுத்திய பொருட்கள், பயணிகள், பணியாளர் ஆகிவற்றின் நிறையை உள்ளாடக்காத கப்பலின் நிறை. ஆனால் கொதிகலன் களில் நீராவியாகும் மட்டத்துக்கு உள்ள நீரின் நிறை உள்ளடக்கப்படுகிறது.
இடப்பெயர்ச்சி, சுமையேற்றிய - சரக்கு, எரிபொருள், நீர், களஞ்சியப்படுத்திய பொருட்கள், பயணிகள், பணியாளர் ஆகியவற்றின் நிறைகளையும் உள்ளடக்கிய கப்பலின் நிறை.
ஏந்துபழு தொன்னளவு - இது சுமையேற்றிய இடப்பெயர்ச்சிக்கும், இலகு இடப்பெயர்ச்சிக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது கப்பலின் மொத்தக் காவும் கொள்ளளவைக் குறிக்கிறது.
சரக்கு ஏந்துபழு தொன்னளவு - இது ஏந்துபழுத் தொன்னளவில் இருந்து எரிபொருள், நீர், களஞ்சியப் பொருட்கள் போன்ற பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறையைக் கழிப்பதானால் வரும் மிகுதியைக் குறிக்கும்.

மிதப்புயரம் - கப்பல் அடிக்கட்டையில் கீழ்ப்பகுதியில் இருந்து நீர்மட்டம் வரையிலான செங்குத்துத் தூரம். இது கப்பல் பயணம் செய்யக்கூடிய நீர்ப்பகுதியின் மிகக் குறைந்த ஆழத்தைக் கண்டறியப் பயன்படுகிறது.

மிதப்புயரம், வளி - இது, சுமையேற்றப்பட்ட நிலையில், நீர்மட்டத்தில் இருந்து கப்பலின் மிக உயரத்திலான புள்ளிக்கான (அலைவாங்கிகள் உள்ளிட்ட) செங்குத்துத் தூரத்தைக் குறிக்கிறது. இது, கப்பல் நீர் வழிகளிக்குக் குறுக்கே அமைந்த பாலங்கள் போன்ற தடைகளுக்குக் கீழால் செல்லுமா என்பதை அறியப் பயன்படுகிறது.

நீளம் - இது கப்பலின் மிகவும் முன்னுக்கு அமைந்துள்ள புள்ளியில் இருந்து பிற்பகுதியில் கடைசிப் புள்ளி வரையான தூரம் ஆகும்.

ஒட்டுமொத்த நீளம் - கப்பலின் மிகக்கூடிய நீளம்.
நீர்மட்ட நீளம் - நீர் மட்டத்தில் அளக்கப்படும் கப்பலின் நீளம்.

சுழல்தண்டுக் குதிரைவலு

கோடை நீர்மட்டம்

தொன்

கணக்கிட்ட தொன்
பதிவுத் தொன்
எடைத் தொன்

தொன்னளவு

மொத்தத் தொன்கள்
நிகரத் தொன்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பல்_அளவைகள்&oldid=3846327" இலிருந்து மீள்விக்கப்பட்டது