முனையளவு (கப்பல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்வி பேர்ஜ் ஆதேன், 225,200 DWT அளவு கொண்ட ஒரு முனையளவு பருமக்காவி, 1979ல் கட்டப்பட்டது.

முனையளவு (Capesize) கப்பல்கள் ஆகப் பெரிய உலர் சரக்குக் கப்பல்கள். இவை சூயெஸ் கால்வாய் (சூயெசுப்பெரும வரையறை), பனாமாக் கால்வாய் (புதுப்பனாப்பெரும வரையறை) என்பவற்றுனூடு பயணம் செய்யக்கூடிய அளவிலும் பெரியவை.[1] எனவே இவை நன்னம்பிக்கை முனை ஊடாகவோ, கொம்பு முனை ஊடாகவோ பயணம் செய்யவேண்டியிருக்கும்.

இவ்வகைக் கப்பல்கள் பரும்பொருட் காவிகள். இவை பொதுவாக நிலக்கரி, தாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருட்களை எடுத்துச் செல்கின்றன. முனையளவு வகை எண்ணெய் தாங்ககளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. முனையளவுப் பருமக் காவிகளின் சராசரி அளவு 156,000 நிலைத்த எடைத் தொன்னளவு (DWT) ஆகும். எனினும், 400,000 DWT அளவு கொண்ட கப்பல்களும் (பொதுவாகத் தாதுப் பொருட்கள் எடுத்துச்செல்ல) கட்டப்படுவதுண்டு. மிகப் பெரிய அளவும், கூடிய மிதப்புயரமும் கொண்டிருப்பதால், மிகப்பெரிய ஆழம் கூடிய முனையங்களுக்கே இவை செல்ல முடியும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Clark, Iain J. (2014-02-19). Commodity Option Pricing: A Practitioner's Guide. Wiley. பக். 267–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781444362404. https://books.google.com/books?id=NifnAgAAQBAJ&pg=PA267. பார்த்த நாள்: 11 April 2014. 
  2. "Modern ship size definitions" (PDF). Lloyd's Register. Jan 3, 2014. Archived from the original (PDF) on டிசம்பர் 26, 2014. பார்க்கப்பட்ட நாள் April 23, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help).
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனையளவு_(கப்பல்)&oldid=3568290" இலிருந்து மீள்விக்கப்பட்டது