மெங்கே நைட்ரோயேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெங்கே நைட்ரோயேற்றம் ( Menke nitration) எலக்ட்ரான் மிகுதி அரோமாட்டிக் சேர்மங்களுடன் தாமிர(II) நைட்ரேட்டு எனப்படும் குப்ரிக் நைட்ரேட்டும், அசிட்டிக் நீரிலியும் சேர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒரு வேதி வினையாகும். இவ்வினையின் விளைவாக செயலூக்கம் பெற்ற தொகுதியுடன் நைட்ரோ வேதி வினைக்குழு ஆர்த்தோ நிலையில் முன்னுரிமையுடன் இணைகிறது [1]. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டச்சு வேதியியலர் யே.பி.மெங்கே இவ்வினையைக் கண்டறிந்ததால் மெங்கே நைட்ரோயேற்றம் என்ற பெயரைப் பெற்றது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Wang, Zerong (2009). "Menke Nitration". Comprehensive organic name reactions and reagents. Hoboken, N.J.: John Wiley. doi:10.1002/9780470638859.conrr42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-63885-9. 
  2. "Nitration with nitrates". Recueil des Travaux Chimiques des Pays-Bas 44: 141. 1925. doi:10.1002/recl.19250440209. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெங்கே_நைட்ரோயேற்றம்&oldid=2747834" இலிருந்து மீள்விக்கப்பட்டது