இந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து தொன்மவியல் உயிரினங்கள் என்பவை இந்து சமயத்தில் உள்ள புராணங்கள் மற்றும் கதைகளில் கூறப்பட்டுள்ள உயிரினங்களாகும்.

விலங்குகளின் உடற்கூறுகளைக் கொண்டவை[தொகு]

மீன்[தொகு]

  • மச்ச அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக கருதப்படுவது. இந்த உருவத்தில் இடைவரை மனித உடலும், அதன்பிறகு மீன் உருவமும் உள்ளது.[1]
  • சுவர்ணமச்சை - தெற்காசியப் பகுதிகளில் கூறப்படும் இராமயணத்தில் இராவணனின் மகளாகவும், அனுமனின் மனைவியாகவும் கூறப்படுகின்றவர். [2] இவர் கடற்கன்னிகளின் இளவரசியாக அனுமான் மீது கொண்டகாதலால் இராமருக்கு பாலம் அமைத்திட உதவி செய்தவராக கருதப்படுகிறார்.[3]
  • வானவில் மீன் என்பது இந்து சமயத்தில் திமிங்கிலத்தினை விடப் பெரியதாக கருதப்படுகின்ற உயிரினமாகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான புத்தரை உண்டதாகவும், அவரை மீனவர் மீட்டதாகவும் கூறப்படுகிறது.[4]

நீர்நில வாழ்வன[தொகு]

  • பீகி - தொடுவான சூரியனின் குறியீடாக் கூறப்படும் தவளையாகும். இது சமஸ்கிருத விளக்கவுரையில் குறிப்பிடுகிறது.

ஊர்வன[தொகு]

  • ஆமைகள்
    • கூர்ம அவதாரம் - திருமாலின் தச அவதாரங்களில் இரண்டாவது அவதாரம். இடுப்பு வரை மனித உடலும், இடுப்பிலிருந்து ஆமை வடிவமும் உடையது. [5][6]
  • முதலைகள்
    • மகரம் - இந்து தொன்மவியலில் உள்ள கடல்வாழ் உயினினம். கங்கா தேவி மற்றும் வருணனின் வாகனமாக மகரம் உள்ளது.[7][8] காமதேவனின் கொடியாகவும் மகரம் உள்ளது.
  • பாம்புகள்
    • நாக வழிபாடு - நாக தேவர்களையும், நாக தேவிகளையும் மக்கள் வழிபடுவதாகும்.
    • கேது - மனித தலையும் பாம்பு உடலும் கொண்டுள்ள உயிரினம். கேது நவக் கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • இராகு (நவக்கிரகம்) - நவக்கிரகங்களில் ஒருவர்.
      • காளிங்கன் - மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற நாகமாகும். இந்த நாகத்தின் மீது கிருஷ்ணன் நடனமாடினார். இதனை காளிங்க நடனம் என்பர்.
      • கார்கோடகன் - வானிலையை கட்டுப்படுத்தும் வல்லமையுடைய நாகம்.
      • தட்சகன் - நாகர்களின் தலைவன்.
      • உலுப்பி, மகாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவிகளுள் ஒருத்தி. இவள் ஒரு நாகதேவதையாவர்.


பறவைகள்[தொகு]

  • கருடன், புராணம் - திருமாலின் வாகனமாக உள்ள கழுகுப் பறவை.
  • அண்டப்பேருண்ட பட்சி - இரு தலைகளைக் கொண்ட பறவை.
  • சடாயு - இராமயணத்தில் அருணா என்ற பறவையின் இளைய மகனாவர். இவருடைய சகோதரர் சம்பாதி. தசரதனின் நண்பராக அறியப்படுகிறார்.
  • சம்பாதி - இராமயணத்தில் அருணா என்ற பறவையின் மூத்த மகன். இவர் சீதை இலங்கையில் இருப்பதை இராமனுக்குத் தெரிவிக்கின்றார்.

யானை[தொகு]

  • ஐராவதம் - தொன்மவியலில் கூறப்படுகின்ற வெள்ளை யானை. இந்த யானையானது இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது.
  • கஜாசுரன் - சிவபெருமானால் கொல்லப்பட்ட யானை.
  • கஜேந்திரன் - தடாகத்தில் இருந்த முதலையால் தாக்கப்பட்ட யானை, இதனை திருமால் காப்பாற்றினார். இச்சம்பவம் கஜேந்திர மோட்சம் என்று கூறப்படுகிறது.
  • பிள்ளையார் - யானை தலையுடன் இருக்கும் கடவுள்.
  • ஐராவதி - ஐராவதம் எனும் வெள்ளையானையின் தாய். இவர் கருது மற்றும் காசியப்பரின் தம்பதியினரின் மகள்.
  • விநாயகி - யானை தலை, மனித உடல் கொண்ட இறைவி.

குரங்கு[தொகு]

காட்டுப் பன்றி[தொகு]

  • வராக அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம். பன்றி தலையும், மனித உடலும் பெற்றதாக உள்ளது.
  • வராகி அம்மன் - ஏழு கன்னிமார்களில் ஒருவராவார். இவர் பன்றி தலையும், பெண் உடலும் பெற்றதாக உள்ளது.
  • தாய்ப் பன்றி வடிவம் - சிவபெருமான் தாயை இழந்த குட்டிகளுக்காக பன்றியாக மாறி பால்தந்த வடிவம்.

மாடு[தொகு]

  • நந்தி தேவர் - சிவபெருமானின் வாகனமாக கூறப்பெறுகின்ற காளை உயிரினம். சில சமயங்களில் காளை தலையும், மனித உடலும் கொண்ட நந்தி தேவர்.
  • காமதேனு - இந்து சமயத்தில் புனிதமாக கருதப்படும் பசு. பெண்ணின் தலையும், பசுவின் உடலும், மயிலின் சிறகும் உடைய உயிரினம். பல சமயங்களில் பசுவே காமதேனுவாக கொண்டாடப்படுகிறது.
  • பட்டி - காமதேனுவின் மகள்.

ஆடு[தொகு]

  • தக்கன் - ஆட்டின் தலையும், மனித உடலும் கொண்டவர். யாகத்தினை சிவபெருமானை அழைக்காமல் செய்தமைக்காக வீரபத்திரரால் தலை வெட்டப்பட்டு, ஆட்டின் தலையை பெற்றவர்.

குதிரை[தொகு]

  • ஹயக்ரீவர் - குதிரைமுகமும் உடலும் பெற்ற திருமாலின் வடிவம்.
  • உச்சைச்சிரவம் - ஏழு தலைகளைக் கொண்ட வெள்ளைக் குதிரை. இக்குதிரை மகாபலி மற்றும் இந்திரனின் வாகனமாக உள்ளது.
  • வெள்ளைக் குதிரை - பல்வேறு தொன்மவியல் கதைகளில் வெள்ளைக் குதிரை இடம்பெற்றுள்ளது.

சிங்கம்[தொகு]

சரப மூர்த்தியின் ஓவியம்
  • நரசிம்மர் - திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவர்.
  • பிரத்தியங்கிரா - சிங்க முகத்தினைக் கொண்ட பெண் தெய்வம்.
  • சரபேசுவரர் - சிவபெருமானின் அறுபத்தி நான்கு வடிவங்களில் ஒருவர். இரண்டு சிம்ம முகமும், உடலும் கொண்டவர்.
  • சிம்மமுகன் - இவர் சிங்க முகத்தினையும், மனித உடலைக் கொண்டவர். சூரபத்மனின் சகோதரராவார்.

கரடி[தொகு]

  • ரிக்சர்கள் - கரடி இனமாக இந்து இதிகாசங்களில் குறிப்பிடப்படுவை.
    • சாம்பவான் - கரடி இனத்தின் தலைவராக இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுபவர். இவரைப் பற்றி மகாபாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது.
    • ஜாம்பவதி - ஜாம்பவானின் மகள். திருமாலின் அவதாரமான கிருஷ்ணனின் மூன்றாவது மனைவியாவார்.

பல உயிர் கலவை[தொகு]

  • நவகுஞ்சரம் - மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகும்.
  • யாளி - இந்துக் கோயில்களின் தூண்களிலும், படிக்கட்டுகளிலும் எண்ணற்ற சிற்பங்களாக யாளி காணப்படுகிறது.
  • சரபா - சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவது. சரபம் பறவையானது சிங்கம் மற்றும் பறவையின் கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.

அரக்கர்கள்[தொகு]

பூதங்கள்[தொகு]

  • துவாரபாலகர் - இறைகளின் வாயிற்காவலர்கள் துவாரபாலகர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் அனுமதியைப் பெற்றே இறையை தரிசனம் செய்ய முடியும். கதை போன்ற பெரிய ஆயுதங்களைக் கொண்டும், பேருருவமாக இருப்பர்கள்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Hindu Temple, Somnathpur
  2. Satyavrat Sastri (2006). Discovery of Sanskrit Treasures: Epics and Puranas. Yash Publications. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89537-04-3. https://books.google.com/books?id=seljAAAAMAAJ. பார்த்த நாள்: 2012-07-24. 
  3. S.N. Desai (2005). Hinduism in Thai Life. Popular Prakashan. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7154-189-8. https://books.google.com/books?id=VmsKr7lqTjwC&pg=PA135. பார்த்த நாள்: 2012-07-24. 
  4. From: A guide to Hinduism. C.M.Faren[full citation needed]
  5. "Hinduism - Shiva Parvati". msu.edu. Archived from the original on 28 September 2012. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  6. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 74. https://archive.org/details/indiathroughages00mada. 
  7. Robert Beer (10 September 2003). The handbook of Tibetan Buddhist symbols. Serindia Publications, Inc.. பக். 77–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-932476-03-3. https://books.google.com/books?id=-3804Ud9-4IC&pg=PA77. பார்த்த நாள்: 17 January 2011. 
  8. George Mason Williams (2003). Handbook of Hindu mythology. ABC-CLIO. பக். 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-106-9. https://books.google.com/books?id=SzLTWow0EgwC&pg=PA294. பார்த்த நாள்: 17 January 2011. 
  9. Bhāgavata Purāṇa 3.26.25
  10. Bhāgavata Purāṇa 10.1.24