ரூபா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூபா தேவி (பிறப்பு: 1989 மார்ச் 25) தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கியவர். 2016 ஆம் ஆண்டு[1] ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டார்.

ஃ பிஃ பா  அமைப்பின்  முதல் தமிழக பெண்  நடுவர்[தொகு]

இதன் மூலம், தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா கால்பந்து  நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்[2] என்ற பெருமையை ரூபா  தேவி பெற்றார். இது வரை,  ஃ பிஃ பா  அமைப்பின்  பெண்   நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர்[3] மட்டுமே  தேந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபா தேவி சிறுமியாக இருந்த போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து  விளையாட்டு பிரபலமான விளையாட்டாக இருந்தது. கால்பந்து மைதானத்துக்கு[1] சென்ற ரூபா தேவி,  அங்கு விளையாடுபவர்களை பார்த்து தானும் கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார்.

ரூபா தேவி விளையாடிய அணிகள்[தொகு]

ஆரம்பத்தில் திண்டுக்கல் மாவட்ட[4] மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடிய ரூபா தேவி, பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மகளிர் கால்பந்து அணி[2], அண்ணாமலை பல்கலைக்கழக் அணி, தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி என  பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு சாதாரண  குடும்பத்தை சேர்ந்த ரூபா தேவியின் விளையாட்டு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் திண்டுக்கல் கால்பந்து அமைப்பு[2] கவனித்துக் கொண்டது.

பிஎஸ்சி மற்றும் பி.எட். மற்றும் முதுநிலை பட்டய சுகாதார ஆய்வாளர் கல்வியை[1] பூர்த்தி செய்துள்ள  ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'சக்தி விருது' , ரெயின் டிராப்ஸ்  நிறுவன விருது  உள்பட பல விருதுகளை, தனது விளையாட்டு சாதனைகளுக்காக பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_தேவி&oldid=3407278" இலிருந்து மீள்விக்கப்பட்டது