ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதையடுத்து, 22 செப்டம்பர் 2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு மருத்துவச் சிகிச்சையினைப் பெற்றார். ஒரு கட்டத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி, 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்களும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் நிலவரமும், அரசு நிர்வாகத்தின் செயற்பாடுகளும், அவரின் மரணம் குறித்தான பிணக்குகள் குறித்த விவரமும் இந்தக் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அனுமதி[தொகு]

22 செப்டம்பர் 2016 அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[1]. சிகிச்சை பலன் அளிக்கிறது என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் அப்பல்லோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.[2]

24 செப்டம்பர் 2016 - உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]

25 செப்டம்பர் 2016 - காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், வழக்கமான உணவுமுறைப்படி உண்கிறார் என மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]

29 செப்டம்பர் 2016 - மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]

30 செப்டம்பர் 2016 அன்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆபத்துதவி மருத்துவர் வந்தார் [4][5] முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் வருவதை தடுக்க தமிழக அரசு முதலமைச்சர் செயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி கோரினார்.[6][7]

செயலலிதாவிற்கு மூச்சு விடுவதற்கு உதவி செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் தங்க அறிவுறுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிருவாகம் தெரிவித்தது.[8][9]

5 அக்டோபர் 2016 அன்று தில்லி எய்ம்சு மருத்துவமனையிலிருந்து 4 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னை வந்தது.[10] நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அப்பல்லோ நிருவாகம் தெரிவித்தது.[11][12] நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்பு ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ், செயலலிதா வகித்த துறைகளை ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் அமைச்சரவையை அவரே வழி நடத்துவார் என்றும் அறிவித்தார். எந்த துறையையும் கவனிக்காவிட்டாலும் முதல்வராக செயலலிதாவே நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது[13]

10 அக்டோபர் 2016 - தில்லி எய்ம்சு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி அப்பல்லோ மருத்துவக் குழுவை சந்தித்தார்.[3]

21 அக்டோபர் 2016 - இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழு சிகிச்சையளித்தது.[3]

இதய நிறுத்தம்[தொகு]

4 டிசம்பர் 2016[தொகு]

மாலையில் ஜெயலலிதாவிற்கு இதய நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவரின் உடல்நலன் அபாயத்தில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.[14] அதன்பிறகு ஈ சி எம் ஓ (ECMO) என்றழைக்கப்படும் இருதயத்தை செயற்கையாக இயக்கும் கருவி, உயிர் காக்கும் பிற மருத்துவக் கருவிகளின் உதவிகொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.[15]

  • பள்ளி, கல்லூரிகள் மறுநாள் இயங்காது என முதலில் தகவல்கள் வெளியாகி பின்னர் மறுக்கப்பட்டது.
  • நீண்ட தூர பேருந்துகள், தொடர்வண்டிகள், வானூர்திகள் ஆகியவற்றில் பயணச்சீட்டு இரத்துகள் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

5 டிசம்பர் 2016[தொகு]

நண்பகல் வாக்கில், அவரின் உடல்நலன் மிகுந்த அபாயத்தில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.[16]

  • தமிழ்நாடு சிறப்புக் காவற்படை, சேமக் காவல் படை ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
  • அப்பல்லோ மருத்துவமனையிருக்கும் கிரீம்சு சாலையில் காவற்துறையின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.[17]
  • கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன.
  • தமிழ்நாட்டுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தையும் கர்நாடக அரசு நிறுத்திவைத்தது.

பிற்பகல் வாக்கில், மிகவும் மோசமான நிலையில் முதல்வரின் உடல்நிலை இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து மருத்துவ ஆலோசனை வழங்கிவரும் ரிச்சர்ட் பீலே தனது அறிக்கையில் தெரிவித்தார்.[18][19]

  • புதுதில்லியிலுள்ள ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
  • முதல்வர் காலமாகிவிட்டதாக மாலை 5.30 மணிவாக்கில் தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் வாசலில் இருந்த தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையை காவற்துறை கட்டுக்குள் கொண்டுவந்தது. தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், அஇஅதிமுக கட்சியின் தலைமைக் கழகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. காலமானதாக வெளியான செய்தியை அப்பல்லோ மருத்துவமனை மறுத்து அறிக்கை வெளியிட்டதும், கட்சிக் கொடி மீண்டும் முழுமையாக பறக்கவிடப்பட்டது.

சிகிச்சை பலனளிக்காமல் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.[20][21][22]

தமிழக அரசியல் முடிவுகள்[தொகு]

நீட் தேர்வு

செயலலிதா மருத்துவமனை அனுமதிக்கு முன்பு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[23] இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.[24] செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள்[25], இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.[26]. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில்[27] தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.[28]

சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை

செயலலிதாவின் ஆட்சியில் சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு கிடப்பில் போடப்பட்ட[29] இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்தது.[30] செயலலிதா மறைந்த இரண்டு மூன்று நாட்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு அறிவித்தது.[31] சில மாற்றங்களுடன் நிறைவேற்ற பரிசீலனை செய்வதாக உறுதியளித்தது.[32]. அறிவிப்பு வந்த அதே நாளில் சிறப்பு குழு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதிப்படுத்தினார்.[33]

உணவு பாதுகாப்புச் சட்டம்

மூன்று வருடமாக செயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்த உணவு பாதுகாப்புச் சட்டம்[34] நவம்பர் 1, 2016 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.[35][36]

உதாய் திட்டம்

சுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று மத்திய அரசு கூறும்[37] உதாய் மின் திட்டம் பல வருடமாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்டு[38] வந்தது. உதாய் திட்டம்[39], அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[40]

பிணக்குகள்[தொகு]

செயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின, ஆயினும் நிகழ்படமோ அல்லது காணொளி காட்சியோ வெளியாகவில்லை. இதனால் விசாரணைக்கு ஆணையிடக் கோரி சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்தார்.[41] ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சுப. உதயகுமாரன் தெரிவித்து இருந்தார்.[42] காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செயலலிதா மரணம் வரை வேறு யாரையும் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.[43] சசிகலா , செயலலிதாவிற்கு நஞ்சு கொடுத்து கொன்றதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்களும் வெளியாகின.[44] 29 திசம்பர் 2016 அன்று சென்னை வானரகத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகவும், 09 பிப்ரவரி 2017 அன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் முதலமைச்சராகவும் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[45]

பிணச் சீரமைப்பு[தொகு]

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு[46] செயலலிதாவின் முகம் வாடாமல் இருக்க செய்ததாக தகவல்கள் வெளியானது.[47] எம்பாமிங் முறையை பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ஒருவரது உடலை குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பாதுகாக்க முடியும். இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை, ரிச்சர்டு ஜான் பீலே என்ற மருத்துவர் எம்பாமிங் முறையில் பதப்படுத்தி வைத்திருந்தார். இவர்தான் செயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டது.

வெள்ளை அறிக்கை கோரிக்கை[தொகு]

செயலலிதாவிற்கு அளித்த மருத்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கவுதமி முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[48][49][50] டிராபிக் ராமசாமியும் செயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து பிணக்கூறு ஆய்வு[51] செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்தார்.[52]. அதுமட்டுமின்றி செயலலிதா மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது அவருடைய கையெழுத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் வழக்கு தொடுத்தார்.[53][54]

ஜெ.தீபா[தொகு]

செயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது.[55] அவருடைய உடலை பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.[56] இவரும் செயலலிதாவின் சிகிச்சை குறித்த விளக்கத்தை அளிக்குமாறு கூறியுள்ளார்.[57] சசிகலா அஇஅதிமுக பொதுச் செயலாளராகவும்,தமிழக முதல்வராகவும் கூடாது என எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்.[58][59][60]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Chief Minister Jayalalithaa hospitalised – Latest health update". சீ நியூசு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  2. "Jayalalitha advised 'few days' stay in hospital for 'recuperative' treatment". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "முதலமைச்சர் ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்". புதிய தலைமுறை (தொலைக்காட்சி). பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 10, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "U.K. doctor flies in to examine Jayalalithaa". இந்து. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  5. "Tamil Nadu chief minister J Jayalalithaa in hospital for a week, UK doctor called in". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  6. "Put an end to rumours on Jayalalithaa's health: Karunanidhi to Tamil Nadu govt". சீ நியூசு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  7. "Karunanidhi demands Tamil Nadu government release photo of Jayalalithaa to end rumours". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2016.
  8. "CM on respiratory support, 'responding adequately'". இந்து. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 4, 2016.
  9. "Tamil Nadu Chief Minister Jayalalithaa on respiratory support, says Apollo hospital". இசுகுரோல். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 4, 2016.
  10. "AIIMS doctors to help in treatment of Jayalalithaa". இந்து. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 6, 2016.
  11. "Governor meets Chief Secretary, Ministers on administration". இந்து. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 9, 2016.
  12. "Jayalalithaa requires longer stay in hospital, Apollo Hospitals says". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 9, 2016.
  13. "O Panneerselvam gets portfolios held by Jayalalithaa till she resumes work". யாகூ. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2016.
  14. "Jayalalithaa critical; back in ICU". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  15. "'Jayalalithaa kept on heart assist device'". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  16. "Jayalalithaa continues to be "very critical". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  17. "Chennai comes under security blanket". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  18. "Richard Beale calls Jayalalithaa's situation 'extremely grave'". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  19. "Jayalalithaa's situation 'grave', Apollo tweets". தி இந்து. 5 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  20. "Jayalalithaa, Tamil Nadu Chief Minister, passes away". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  21. "Amma no more: Tamil Nadu chief minister Jayalalithaa dies". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 5, 2016.
  22. "Jayalalithaa died at 11.30 pm, confirms Apollo". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 5, 2016.
  23. "Ensure NEET is not forced on TN even in future: Jaya writes to PM Modi". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  24. "NEET controversy strikes again, State Board students from Tamil Nadu move SC". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  25. "Tamil Nadu govt to tutor 10,000 students for NEET & JEE". தி டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  26. "NEET nightmare haunts TN". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  27. "தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் "நீட்' தேர்வு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  28. "நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  29. "மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு போட்ட தடை ரத்ததா ?". தினகரன். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  30. "பறக்கும் சாலை: உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  31. "Light at end of Port-Maduravoyal expressway". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  32. "Tamil Nadu gives suggestions to Centre on Maduravoyal Expressway". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  33. "துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: மாற்றங்களை செய்து நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரை - சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தகவல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  34. "Tamil Nadu to implement National Food Security Act from November 1". டி என் ஏ இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  35. "How Tamil Nadu fell in line on Food Security Act". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  36. "TN govt to implement Food Security Act, rice ceiling goes". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  37. "Centre says TN can save Rs. 22,400 crore by joining Uday scheme". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  38. "T.N. will insist on meeting demands before joining UDAY: Minister". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  39. "Tamilnadu won't join UDAY scheme until Centre meets our demands: Minister". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  40. "Tamil Nadu agrees to join Centre's UDAY scheme". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  41. "ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கேட்டு ராஜ்நாத்திடம் பெண் எம்பி மனு". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  42. "ஜெயலலிதா மரண மர்மம்... நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை !". விகடன். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  43. "ஜெயலலிதா மரணத்தில் அனைத்துமே மர்மம்!". லங்கா சிறீ. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  44. "Who is Sasikala to keep Deepa away from Jayalalithaa? Was Jayalalithaa slow poisoned?". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  45. "சசிகலாவின் முதல் உரை".
  46. "எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா?". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  47. "ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி". தினமலர். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  48. "ஜெயலலிதாவின் மரணத்தில் ஏன் இவ்வளவு பதிலளிக்கப்படாத கேள்விகள்?; பிரதமர் மோடிக்கு நடிகை கௌதமி கடிதம்!". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  49. "ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? - கௌதமியின் கடிதம்". விகடன். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  50. "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  51. "Traffic Ramaswamy files PIL seeking Jayalalithaa's body to be dug out for post-mortem". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  52. "ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு!". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  53. "பொன்னையன், அப்பல்லோ நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிய கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  54. "சுயநினைவோடுதான் ஜெ. கைரேகை வைக்கப்பட்டதா: கோர்ட்டுக்கு போன டிராஃபிக் ராமசாமி!". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  55. "Jayalalithaa's niece Deepa Jayakumar aims to make things tricky for Sasikala". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  56. "Now, Jayalalithaa's Niece Stakes Claim to AIADMK Top Post". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  57. "Jayalalithaa was buried: This could be why". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  58. "Jayalalithaa's Niece Deepa Jayakumar Challenges Sasikala To Claim Her Aunt's Legacy". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  59. "As Sasikala consolidates support, Jayalalithaa's niece tries fishing expedition". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
  60. "Sasikala Not Fit To Lead Party, Says Jayalalithaa's Niece Deepa Jayakumar". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.

வெளியிணைப்புகள்[தொகு]