மயிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலை என்பது ஒரு நிறம். வெளிர்-கருமை நிறம் கொண்ட மாட்டை மயிலைமாடு எனக் கூறும் வழக்கம் இக்காலத்திலும் உண்டு.

சங்ககாலப் புலவர் அரிசில் கிழார் மயிலைப் பூ காட்டுக்காக்கை போல வெளிர்கருமை நிறம் கொண்டது என்றும், மகளிர் அதனைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.[1]

சிலப்பதிகாரம் [2] மணிமேகலை [3] ஆகிய நூல்கள் மயிலைமலர் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மயிலாப்பூர்
சென்னையிலுள்ள மயிலாப்பூரை மயிலை என்று வழங்குகின்றனர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கானக் காக்கைக் கருஞ்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப் பெருந்தோள் குறுமகள் மயிலைக் கண்ணி புறநானூறு 342-2
  2. 5-191, 13-158
  3. 24-38
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலை&oldid=3187793" இலிருந்து மீள்விக்கப்பட்டது