கமோமி தீவு

ஆள்கூறுகள்: 41°52′04″N 140°06′51″E / 41.867781°N 140.1143°E / 41.867781; 140.1143
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமோமி
Kamome
கமோமி தீவின் சிறப்பு எய்சி பாறையாகும்.(ஏப்ரல் 2007)
புவியியல்
அமைவிடம்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்41°52′04″N 140°06′51″E / 41.867781°N 140.1143°E / 41.867781; 140.1143
தீவுக்கூட்டம்சப்பானியத் தீவுக் கூட்டம்
கரையோரம்2.6 km (1.62 mi)
உயர்ந்த ஏற்றம்27.6 m (90.6 ft)
உயர்ந்த புள்ளிகாமுய் மலை
நிர்வாகம்
சப்பான்
மாநிலங்கள்ஒக்கைடோ
துணைமாநிலம்ஐயாமா துணைமாநிலம்
மாவட்டம்ஐயாமா மாவட்டம்

கமோமி தீவு (Kamome Island ) சப்பான் கடலிலுள்ள ஒரு தீவாகும். மிகச்சரியாக சொல்வதென்றால் இதை தீபகற்பம் என்றுதான் கூறவேண்டும். சப்பான் நாட்டின் ஒக்கைடோ மாநிலத்திலுள்ள எசாச்சி நகரத்தின் கடற்கரைக்கு சற்று அப்பால் இத்தீவு அமைந்துள்ளது. எசாச்சி துறைமுகத்திற்கு ஒரு அலைத்தடுப்புச் சுவராக இத்தீவு செயற்படுகிறது. பல வரலாற்றுத் தலங்கள் இத்தீவில் இருக்கின்றன. ஐயாமா மாநில இயற்கைப் பூங்காவின் ஒரு பகுதியாக கமோமி தீவு பாதுகாக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதத்தில் இங்கு இரண்டு நாள் திருவிழா ஒன்று நடத்தப்படுகிறது. நீச்சல், முகாம், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக மக்கள் ஆண்டு முழுவதும் இத்தீவிற்கு வந்து பார்த்துச் செல்கின்றார்கள்[1].

புவியியல்[தொகு]

கடற்கரையோரக் கரைத்திட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கமோமி தீவின் பெரும்பகுதி தட்டையாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 91 அடி அல்லது 27.6 மீட்டர் உயரத்தில், 200 மீட்டர் அகலமும் (660 அடி), 1 கிலோமீட்டர் (0.62 மைல்) நீளமும், 2.6 கிலோமீட்டர் (1.6 மைல்) கடற்கரையும் கொண்டதாக இத்தீவு உள்ளது. ஒரு 500 மீட்டர் (1,600 அடி) நீளமான மணல்திடலைக் கடந்த பின்னர் நிலப்பரப்புடன் இணைந்து சாலையில் செல்வதற்கு வாய்ப்பை அளிக்கக்கூடிய தீவாக உள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நீண்டுள்ள இத்தீவின் கிழக்குத் திசையில் நிலப்பகுதி விரிந்து கிடக்கிறது. கடல் அலைகளிடமிருந்து கடற்கரையைப் பாதுகாக்கும் ஒர் இயற்கையான அலைத்தடுப்புச் சுவராக கமோமி தீவு செயல்படுகிறது. வடக்குப் பகுதியிலும் இப்பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக அலைத்தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. எனினும், தீவின் மேற்குக் கடற்கரை கடல் அலைகளால் கடுமையாக அரிக்கப்பட்டு அழிந்துவருகிறது [2][1].

வரலாறு[தொகு]

எடோ காலத்துக் கப்பல்கள் ஒக்கைடோவுடன் வணிகம் மேற்கொள்வதற்கு ஒரு இயற்கைத் துறைமுகமாகவும், மீனவர்களுக்குப் பசிபிக் கடல் வாளை மீன்கள் கிடைக்கும் இடமாகவும் கமோமி தீவு பயன்பட்டது.

சப்பானியக் கடலில் வாளை மீன்வளத்தைக் குறித்து எய்சிப் பாறையின் பின்னணியில் ஒரு தொல்கதை கூறப்பட்டு வருகிகிறது. முன்னொரு காலத்தில் இக்கடல் பகுதியில் இருந்த கடல் வாளை மீன்கள் எல்லாம் முழுவதுமாக இடம் பெயர்ந்து எங்கோ போய்விட்டனவாம். மீனவர்களுக்கு உதவி செய்வதற்காக குறி சொல்லும் கிழவி ஒருத்தி, ஒரு புட்டியில் மந்திரத் திரவத்தை நிரப்பி கடலில் எறிந்தாளாம். காணாமல் போன மீன்கள் யாவும் திரும்பி வந்தனவாம். கிழவி எறிந்த புட்டி கடலின் தரைப் பரப்பை சென்றடைந்த புட்டி பாறையாக மாறியதாம். இப்பாறையே சப்பானின் கடல் தெய்வமாகக் கருதப்படுகிறதாம்[3][4] 500 வயது நிரம்பியதாகக் கருதப்படும்[1] எய்சிப் பாறை இப்புராணக் கதையைப் பிரதி பலிப்பதாகக் கருதப்படுகிறது.

1615 இல், வியாபாரிகள் குழு ஒன்று சப்பான் கடலின் கடல் தெய்வத்திற்காக தீவில் ஒரு கோவில் கட்டினர். 1868 ஆம் ஆண்டு இக்கோயில் இட்சுகுசிமா கோயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எடோ காலத்திய புகழ்வாய்ந்த சப்பானியக் கவிஞர் மட்சுவோ பாசோவிற்கு ஒரு நினைவுச் சின்னம் 1814 ஆம் ஆண்டு இச்சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டது[1]

கப்பலில் பொருட்கள் நிரப்பவும் கப்பல்கள் கடந்து செல்லவும் வியாபாரிகளுக்குத் தீவு பெரிதும் உதவியதால், நீண்ட காலமாக இங்கு நன்னீர் பிரச்சினை இருந்து வந்தது. 1876 இல் எசாச்சியைச் சேர்ந்த முரகாமி என்ற வியாபாரி தண்ணீருக்காக ஏராளமான பொருள் செலவில் ஒரு கிணற்றை உருவாக்கினார். இதே காலகட்டத்தில் வெவ்வேறு குலத்தைச் சார்ந்த சப்பானிய வாரிசுகளுக்கு இடையில் மோதல்கள் தோன்றியிருந்தன. இதன் காரணமாக எசாச்சி நகரத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு பீரங்கிகள் தீவுக்குக் கொண்டு வரப்பட்டன[1]

பெயர்க் காரணம்[தொகு]

தீவின் நீள் வடிவம் ஒரு கடற்காகத்தைப் போல தோற்றமளிக்கிறது. இதன் அடிப்படையில் தான் தீவினை கமோமி என்ற பெயரால் அழைக்கின்றனர். கமோமி என்பதற்கு கடற்காகம் என்று பொருளாகும். எடோ காலகட்டத்தில் இது பென்டென்யிமா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. முன்னதாக பல சப்பானியத் தீவுகள் இப்பெயரைப் பகிர்ந்து கொண்டன, இந்துக்களின் தெய்வமான சரசுவதியை சப்பானிய பௌத்தமும் சிண்டோவும் பென்சாயிடன் என்று அழைத்தன, சப்பானியர்கள் சரசுவதியை தண்ணிருக்கான தெய்வமாகவும் மீனவர்களின் பாதுகாவலராகவும் கருதி பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர்[1]

விலங்கு, தாவர வளம்[தொகு]

ஒரு நிலையான மேற்கு காற்று இத்தீவை பெரும்பாலும் புல் மூடிய தீவாக வைத்திருக்கிறது. வண்ணமயமான மேப்பிள் மரங்களுக்கும் மங்கோலிய ஓக் மரங்களுக்கும் இத்தீவு தாயகமாக இருக்கிறது. தீவைச்சுற்றிலும் உள்ள கடல்நீரில் பருவநிலைக்கேற்ற வகையில் நீர்வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் அதிகமான அதிகமான அளவில் காணப்படுகின்றன[1].

சுற்றுலா[தொகு]

மீன்பிடித்தலுக்கும் நீண்ட நடைப்பயணத்திற்கும் ஏற்ற சூழல் ஆண்டு முழுவதும் இருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது. கடற்கரைகள் கோடை கால நீச்சலுக்கு பயன்படுத்தப்படுகின்றன[1].

மத நடவடிக்கைகள்[தொகு]

சூலைமாத முதல் வாரத்தின் இறுதியில் மட்சூரி எனப்படும் விடுமுறைநாள் விழாவில் புராண காலத்து எய்சிப்பாறைக்கு அஞ்சலி செலுத்தும் நாள் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் குழு ஒன்று உள்ளூர் கோவிலில் ஆசி பெற்ற பின்னர், பாரம்பரிய பண்டோசி உடையில் பாறையை நோக்கி நீந்துவார்கள். அதன்மீது ஏறி பாறையைச் சுற்றியுள்ள 30 மீட்டர் வைக்கோல் பிரியை மாற்றுவார்கள். இவ்வைக்கோல் பிரி 500 கிலோ எடை உள்ளதாக இருக்கும்[1][5][6] . பழைய வைக்கோல் பிரியை அகற்றிவிட்டு புது வைக்கோல் பிரியை மாற்றுவதை இலக்காகக் கொண்டு விழா இரண்டு நாட்களுக்கு நடைபெறும். இவ்விழாவில் படகுப் போட்டி , இசைப்போட்டி போன்ற போட்டிகளும், பாரம்பரிய உடையில் மக்களின் அணிவகுப்பும் சிறப்பாக நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 かもめ島 பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Esashi Town Guide (in Japanese)
  2. 檜山道立自然公園. Home page of the Hokkaido government (in Japanese). HOKKAIDO GOVERNMENT. 2006. Archived from the original on 2017-06-24. பார்க்கப்பட்ட நாள் 2009-07-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 瓶子岩 பரணிடப்பட்டது 2007-07-29 at Archive.today Official website of Hiyama Prefecture, Hokkaido (in Japanese)
  4. A Town Blessed with the Romance of History பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம், Esashi town guide
  5. Kamome Island Festival Program பரணிடப்பட்டது 2011-01-14 at the வந்தவழி இயந்திரம் (in Japanese)
  6. Kevin Nute Place, time, and being in Japanese architecture, Routledge, 2004 ISBN 0-419-24010-1 p. 63

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமோமி_தீவு&oldid=3792983" இலிருந்து மீள்விக்கப்பட்டது