அச்சுதன் (விஷ்ணு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சுதன் (Achyuta) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அச்சுதன் என்ற பெயர் 100[1] மற்றும் 318வது பெயராக வருகிறது. பகவத் கீதை நூலில், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை பல முறை அச்சுதன் என்றே அருச்சுனன் அழைத்துள்ளார். (பகவத் கீதை அத்தியாயம் – 1, சுலோகம் 21-22)

பெயர்க் காரணம்[தொகு]

அச்சுதன் எனும் சொல்லுக்கு அசையாதவன், மாறாதவன், வீழ்ச்சியடையாதவன் என்று பொருள்.[2]

விஷ்ணு சகஸ்ரநாம நூலின் விளக்க உரையில், ஆதிசங்கரர், அச்சுதன் என்பதற்கு, உள்ளார்ந்த இயல்பு மற்றும் சக்திகளை என்றும் இழக்காதவன் என்றும், மேலும் மாறாத்தன்மை கொண்டவன் என்றும், நிலையானவன் என்றும் குறிப்பிடுகிறார். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vishnu Sahasranamam
  2. "‘Achyuta’ means immovable. Arjuna calls Lord Krishna ‘Achyuta’. He wants the immovable to start moving for him! ‘Achyuta’ also means one who has never fallen. Thereby Arjuna wants to suggest to Lord Krishna that He will never fail him." — Maharishi Mahesh Yogi on the Bhagavad Gita, a New Translation and Commentary, Chapter 1–6. Penguin Books, 1969, p 42 (verse 1:21), p 47 (verse 1:25)
  3. "Birth, lifespan, growth, actions, illusions, decay, death (or: hunger, thirst, grief, illusion, old age, death) Srila Prabhupada". Archived from the original on 2014-09-09. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  • Cited from Sri Vishnu Sahasranama, commentary by Sri Shankaracharya, translated by Swami Tapasyananda (Ramakrishna Math Publications, Chennai).


"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதன்_(விஷ்ணு)&oldid=3540529" இலிருந்து மீள்விக்கப்பட்டது