எக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி
தலைமையகம்சென்னை 600 002, இந்தியா
தொழில்துறைநிதிச் சேவைகள்

எக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி அல்லது எக்விடாஸ் வங்கி (Equitas Small Finance Bank) இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, சென்னையில் மூன்று கிளைகளுடன் தனது வங்கி நடவடிக்கைகளை 5 சூன் 2016 அன்று துவக்கிய தனியார் துறை வங்கியாகும்.[1] இவ்வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும், தலைமை நிர்வாகியாகவும் பி. என். வாசுதேவன் செயல்படுகிறார்.

கிளைகள்[தொகு]

எக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி 2016 – 2017 நிதி ஆண்டிற்குள் 11 இந்திய மாநிலங்களில் 412 கிளைகளுடன் செயல்பட திட்டமிட்டுள்ளது. இந்த 412 கிளைகளில், ஐம்பது விழுக்காடு கிளைகள் தென்னிந்தியாவிலும், 30 விழுக்காடு கிளைகள் மேற்கு இந்தியாவிலும், 20 விழுக்காடு கிளைகளை வட இந்தியாவிலும் தொடங்க திட்டமிட்டுள்ளது. அவைகளில் 25 விழுக்காடு கிளைகள், வங்கிகள் இல்லாத கிராமப் புறங்களில் துவக்க உள்ளது.[2] [3]

நிதிச் சேவைகள்[தொகு]

தற்போது, எக்விடாஸ் வங்கி வழங்கியுள்ள 6,500 கோடி ரூபாய் கடனில், ஐம்பது விழுக்காடு குறுங்கடனாகவும் (microfinance), 25 விழுக்காடு வாகனக் கடனாகவும் மற்றும் மீதமுள்ள 25 விழுக்காடு சிறு மற்றும் குறு வணிக கடனாகவும், வீட்டுவசதி கடனாகவும் வழங்கியுள்ளது.

வரலாறு[தொகு]

சூன் 2016இல் எக்விடாஸ் நிறுவனத்தின்[4] துணை நிறுவனங்களான எக்விடாஸ் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் (EHFL) மற்றும் எக்விடாஸ் வீட்டுவசதி நிதி நிறுவனமும் (EHFL), சூன் 2016இல் எக்விடாஸ் நிதிநிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர், எக்விடாஸ் நிதிநிறுவனத்தை வங்கி நிறுவனமாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Equitas starts Small Finance Bank operations
  2. சென்னையில் வங்கி சேவை; எக்­விடாஸ் நிறு­வனம் துவக்­கியது
  3. எக்விடாஸ் சிறிய வங்கி தொடக்கம்
  4. http://www.equitas.in/
  5. Equitas gets final licence for small finance bank

வெளி இணைப்புகள்[தொகு]