அதிசய திருடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிசய திருடன்
சுவரொட்டி
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புஎஸ். பாவநாராயணா
டி. பி. நாராயணா
கதைதஞ்சை இராமையாதாஸ்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
கே. பிரசாத் ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
டி. பி. முத்துலட்சுமி
ஒளிப்பதிவுஅன்னையா
படத்தொகுப்புஎன். எஸ். பிரகாசம்
ஆர். வி. ராஜன்
கலையகம்விஜயா-வாஹினி
விநியோகம்சாஹினி ஆர்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடுடிசம்பர் 12, 1958
ஓட்டம்150 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிசய திருடன் 1958 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன் டி. எஸ். பாலையா, சாவித்திரி, கே. ஏ. தங்கவேலு, டி. பி. முத்துலட்சுமி சித்தூர் வி. நாகையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]

திரைக்கதை[தொகு]

ஓர் அதிசய திருடன், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிக்க முற்படும் நீலகலாகண்டம் என்ற அமைச்சரை எவ்வாறு பிடித்துக் கொடுக்கிறான் என்பதுதான் கதை. அந்த அமைச்சர் பெண் மோகம் கொண்டவன். அவன் கௌரி என்ற பெண் மீது கண் வைத்திருக்கிறான். ஆனால் கௌரி அதிசய திருடனின் காதலி. அவள் அவனின் திருட்டு வழியைக் கைவிடச் செய்வதற்காக ஒரு பெரியவரிடம் அழைத்துச் செல்கிறாள். அவன் திருட்டுத் தொழிலைக் கைவிடுவதாகச் சத்தியம் செய்கிறான். ஆனால் அமைச்சரைக் காட்டிக் கொடுப்பதற்காகத் தனது சத்தியத்தை மீற வேண்டிய ஒரு சூழ்நிலை அவனுக்கு ஏற்படுகிறது. அரண்மனையில் நான்கு அரியவகை வைரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஓர் இரும்புப் பெட்டியை அவன் திறக்க முயலும்போது ஓர் ஒற்றைக் கண் மனிதனைச் சந்திக்கிறான். அந்த ஒற்றைக் கண் மனிதன் வேறு யாருமல்ல, மாறுவேடத்தில் வந்த அரசன் தான். இறுதியில் அமைச்சரின் திருட்டு வெளிப்படுகிறது. காதலர்கள் அரசனின் ஆசியோடு திருமணத்தில் இணைகின்றனர்.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்புக் குழு[தொகு]

  • இயக்குநர் = பி. புல்லையா
  • கதை, வசனம் = தஞ்சை ராமையாதாஸ்
  • இசை = எஸ். தட்சணாமூர்த்தி
  • கலை = காட் காங்கர்
  • நிழற்படம் = எம். சத்யம்
  • ப்ராசசிங் = பி. எம். விஜயராகவலு (விஜயா ஆய்வகம்)
  • ஒலிப்பதிவு = ஏ. கிருஷ்ணன்
  • பின்னணி இசை = கே. விஸ்வநாத்
  • நடன ஆசிரியர்கள் = வேம்பட்டி சத்யம், தங்கராஜ், சின்னி சம்பத் குமார்
  • சண்டைப்பயிற்சி = வி. பி. சுவாமி[1]

பாடல்கள்[தொகு]

அதிசய திருடன்
Soundtrack
வெளியீடு1958
ஒலிப்பதிவு1958
இசைப் பாணிசரீகம
நீளம்19:05
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்எஸ். தட்சணாமூர்த்தி

திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் எஸ். தட்சணாமூர்த்தி, கே. பிரசாத் ராவ் ஆகியோர். பாடல்களை இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எஸ். வி. பொன்னுசாமி, ஜிக்கி, பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, எஸ். ஜானகி.

திரைப்படத்தில் அதன் இசை ஒரு முக்கிய அம்சமாக விளங்கியது. குறிப்பாக முருகன் மீது பாடப்படும் ஒரு பாடல் மிகப் பிரபலம் அடைந்தது. சித்தூர் வி. நாகையாவே ஒரு சிறந்த பாடகர். திரையில் அவர் பாடுவதாக காட்சி அமைந்திருக்க பின்னணியில் டி. எம். சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடினார்.[1]

வரிசை எண் பாடல் பாடகர்/கள் கால அளவு (நி:செக்)
1 வாருங்க அம்மாமாரே ஜிக்கி 02:51
2 முருகா என்றதும் உருகாதா மனம் டி. எம். சௌந்தரராஜன் 03:40
3 ஏ அம்மாடி ஏ ஐயாடி டி. எம். சௌந்தரராஜன் 03:42
4 யாருன்னு இனிமேல் கேட்காதே கே. ஜமுனா ராணி 02:39
5 கொல கொலயா முந்திரிக்கா எஸ். சி. கிருஷ்ணன், எஸ். ஜானகி 03:24
6 எல்லா விளக்கும் விளக்கல்ல சீர்காழி கோவிந்தராஜன் 0:46
7 வெள்ளி நிலாவே ஓ வெள்ளி நிலாவே பி. சுசீலா 03:23

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 கை, ராண்டார் (18 June 2016). "Athisaya Thirudan (1958)". தி இந்து. Archived from the original on 28 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_திருடன்&oldid=3796964" இலிருந்து மீள்விக்கப்பட்டது