சிந்தாமணி விநாயகர் கோயில், உஜ்ஜைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்தாமணி விநாயகர் கோயில் , இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிப்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான விநாயகர் கோயிலாகும். இவ்விநாயகர் ரித்தி மற்றும் சித்தி எனும் இரு தேவியர்களுடன் காட்சியளிக்கிறார்.

சிந்தாமணி என்ற சமசுகிருத மொழிச் சொல்லிற்கு மனத்துயரங்களிலிருந்து விடுவிப்பவர் எனப் பொருளாகும்.

சித்திரை மாத ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.[1]

பரமாரப் பேரரசர் இக்கோயிலில் கலைநயத்துடன் கூடிய அரங்கம் கட்டப்பட்டது. குவாலியர் ராணி அகில்யாபாய் ஓல்கர் இக்கோயிலில் தெப்பக்குளம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. History of Temple