போவியைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போவியைட்டு (Bowieite) என்பது (Rh,Ir,Pt)2S3, என்ற வாய்ப்பாடு கொண்ட ரோடியம்-இரிடியம்-பிளாட்டினத்தின் சல்பைடு கனிமம் ஆகும். அலாசுகாவின் குட்நியூசு விரிகுடாவில் பிளாட்டினம்-கலப்புலோகம் நக்கெட்சுவில் இக்கனிமம் காணப்படுகிறது [1][2][3]. ஒளிபுகா கனிமங்களை அடையாளப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய விஞ்ஞானி சிடான்லி போவி (1917-2008) இக்கனிமத்தைக் கண்டறிந்த பின்னர் அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பு 1984 இல் இக்கனிமத்திற்கு போவியைட்டு எனப் பெயரிட்டது [4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போவியைட்டு&oldid=2747800" இலிருந்து மீள்விக்கப்பட்டது