உழுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழுவை
புதைப்படிவ காலம்:Upper Jurassic–Recent
[1]
Shovelnose guitarfish, Rhinobatos productus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Chondrichthyes
துணைவகுப்பு: Elasmobranchii
வரிசை: Rajiformes
குடும்பம்: Rhinobatidae
J. P. Müller & Henle, 1837
Genera

See text.

உழுவை (guitarfish) என்பவை Rhinobatidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த திருக்கை ஆகும். இவற்றிற்கு வீணை மீன், படங்கன், பண்டகள் போன்ற பெயர்களும் கடலோரத் தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளன.இந்த மீன்கள் நீண்ட உடலும், தட்டையான தலை மற்றும் சிறு உடலும், இறக்கை போன்ற துடுப்பும் கொண்டவை. இவற்றில் பல்வேறு இனங்கள் உள்ளன. இவை உலகம் முழுவதும் வெப்பமண்டல, மற்றும் மிதவெப்ப கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கடலடி தரையில் வாழக்கூடியன.

விளக்கம்[தொகு]

உழுவையின் உடலமைப்பு சுறா மற்றும் திருக்கை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட உடலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வால் சுறாவின் வால்போன்ற வடிவம் கொண்டுள்ளது. ஆனால் இவற்றில் பல இங்களின், தலை முக்கோணம், அல்லது கித்தார் போன்ற வடிவில் உள்ளது, இதன் மூச்சுத் துளைகள் திருக்கைகளுக்கு உள்ளதுபோல இதன் உடலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும். இதன் மார்புத் துடுப்பு தசைகளின் இணைவால் உருவாக்கப்பட்டு திருக்கைமீன் போல இருக்கும்.[2]

இனப்பெருக்கம்[தொகு]

இவை தன் உடலுக்குள்ளேயே முட்டையிட்டு அங்கேயே அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.

வாழிடம்[தொகு]

உழுவைகள் கடலடி தரையில் உள்ள மணல் அல்லது மண் ஆகியவற்றில் புதைந்துள்ள புழுக்கள், நண்டுகள், மட்டிகள் ஆகியவற்றை உண்ணக்கூடியன.[3] இவற்றால் மிக உப்பு, புதிய, மற்றும் உவர் நீரை பொறுத்துக்கொள்ள முடியாது.[4] இவை பொதுவாக கடற்கரை ஓரமான கடற்பரப்பில் அல்லது முகத்துவாரத்தில் 30 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2011). "Rhinobatidae" in FishBase. February 2011 version.
  2. Stevens, J.; Last, P.R. (1998).
  3. "Shovelnose guitarfish, Sandy Seafloor, Fishes, Rhinobatos productus at the Monterey Bay Aquarium".
  4. 4.0 4.1 Sullivan, Taylor.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழுவை&oldid=2444090" இலிருந்து மீள்விக்கப்பட்டது