இரேனியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் அறுபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரேனியம்(VI) புளோரைடு
வேறு பெயர்கள்
இரேனியம் அறுபுளோரைடு
இனங்காட்டிகள்
10049-17-9
EC number 233-172-2
InChI
  • InChI=1S/6FH.Re/h6*1H;/q;;;;;;+6/p-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66231
SMILES
  • F[Re](F)(F)(F)(F)F
UNII U1FW6E300T Y
பண்புகள்
F6Re
வாய்ப்பாட்டு எடை 300.20 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறப்படிக திண்மம்[1]
அடர்த்தி 4.94g/mL[2]
உருகுநிலை 18.5 °C (65.3 °F; 291.6 K)[1]
கொதிநிலை 33.7 °C (92.7 °F; 306.8 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரேனியம் அறுபுளோரைடு (Rhenium hexafluoride) என்பது ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இரேனியம்(VI) புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அறியப்பட்டுள்ள 17 இரட்டை அறுபுளோரைடுகளில் இரேனியம் அறுபுளோரைடும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

கூடுதலான இரேனியம் உலோகத்துடன் இரேனியம் எழுபுளோரைடை அழுத்தக் கலனில் 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து வினைபுரியச் செய்தால் இரேனியம் அறுபுளோரைடு உருவாகிறது[2]

6 ReF7 + Re → 7 ReF6

இயற்பியல் பண்புகள்[தொகு]

அறை வெப்பநிலையில் இரேனியம் அறுபுளோரைடு நீர்மமாகக் காணப்படுகிறது.18.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் மஞ்சள் நிறத் திண்மமாக இது உறைகிறது. இச்சேர்மத்தின் கொதிநிலை 33.7 பாகை செல்சியசு[1] ஆகும்.

கட்டமைப்பு[தொகு]

−140 பாகை செல்சியசு வெப்பநிலையில் Pnma இடக்குழுவுடன், ஏ = 9.417 Å, பி = 8.570 Å, மற்றும் சி = 4.965 Å என்ற அணிக்கோவை அளபுருக்களுடன் செஞ்சாய்சதுரமாக இரேனியம் அறுகுளோரைடு படிக வடிவம் கொண்டுள்ளது. இதன் கட்டமைப்பில் உள்ள அலகுகூட்டிற்கு நான்கு முற்றுறா வாய்ப்பாடுகள் இச்சேர்மத்திற்கு 4.94 செ.மீ -3 அடர்த்தியைக் கொடுக்கின்றன[2]. வாயு அல்லது நீர்மநிலைக்கு அத்தியாவசியமான (Oh) இடக்குழுவுடன் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பை இரேனியம் அறுபுளோரைடு ஏற்றுள்ளது. Re–F பிணைப்பின் பிணைப்பு நீளம் 1.823 Å ஆகும்[2].

பயன்[தொகு]

மின்னணுவியல் துறையில் இரேனியம் படங்களை பதிவுசெய்ய ஒரு வணிக முக்கியத்துவம் மிக்க பொருளாக இரேனியம் அறுபுளோரைடு பயன்படுகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 CRC Handbook of Chemistry and Physics, 90th Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, ISBN 978-1-4200-9084-0, Section 4, Physical Constants of Inorganic Compounds, p. 4-85.
  2. 2.0 2.1 2.2 2.3 T. Drews, J. Supeł, A. Hagenbach, K. Seppelt: "Solid State Molecular Structures of Transition Metal Hexafluorides", in: Inorganic Chemistry, 2006, 45 (9), S. 3782–3788; எஆசு:10.1021/ic052029f; PubMed.
  3. Meshri, D. T. (2000). "Fluorine Compounds, Inorganic, Rhenium". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. doi:10.1002/0471238961.1808051413051908.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471238961. 

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_அறுபுளோரைடு&oldid=2696091" இலிருந்து மீள்விக்கப்பட்டது